எதுக்கு இந்த விளம்பரம்..ஜெனிலியாவிற்கு மட்டும் 4 கோடி.. ரவி மோகனுக்கு இது தேவையா?
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோஸின் திறப்பு விழா ஆகஸ்ட் 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்டது. நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
தயாரிப்பி நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் ஒரு பிரமாண்டமான திருவிழா போல நடைபெற்றது. ஏற்கனவே பலவிதமான கடன் சுமையில் இருக்கும் ரவி மோகன் எப்படி இப்படி ஒரு பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார், என இணையத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு Gem Cinemas youtube தளத்தில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ்: புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி மோகன், ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான பூஜை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது, அந்த பூஜைக்கு மட்டும் நான்கு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யோகி பாபு, எஸ்.எஸ். சூர்யா மற்றும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் என அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழாவிற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாத வேலை: ரவி மோகனுடன் நடித்தவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்ததாகவும் குறிப்பாக ஜெனிலியாவிற்கு பல கோடி கொடுத்து அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே போல, உலக அளவில் இருக்கும் கெனிஷாவின் நண்பர்களுக்கு இன்டர்நேஷனல் விமான டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டலில் அறை, ராஜபோக விருந்து என அனைத்துமே கொடுத்து இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பூஜைக்கு மட்டுமே நான்கு கோடி ரூபாய் அளவில் செலவானதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வீட்டின் வாடகையை கட்ட முடியாத நிலைமையில் இருக்கும் ரவி, எப்படி நான்கு கோடி ரூபாய் அளவில் ஒரு பிரம்மாண்டமான அளவில் ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியும் என்றால் அத்தனையும் கடன் தான். பெரிய தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், கந்துவட்டி போல கொடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களிடமும் 30 லட்சம், 40 லட்சம் என கிடைத்த பணத்தை வாங்கி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்திற்கு பூஜை போட்டு இருக்கிறார். ரவி மோகன் நம்பிக்கையோடு இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருந்தாலும், நான் ஒரு தயாரிப்பாளர் என்கின்ற முறையில் சொல்கிறேன், இது ஒரு மிகப்பெரிய விஷப்பரீட்சை.
ஆழம் தெரியாமல்: ஜெயம் ரவிக்கு திரைப்பட தயாரிப்பாளராக இருந்து முன் அனுபவம் இல்லை, அதேபோல இயக்குனராகவும் இருந்தும் முன் அனுபவம் இல்லை, அப்படி இருக்கும்போது தற்போது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் களமிறங்க இருக்கிறார். யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் அப்படி இருக்கும்போது அவரை வைத்து ஒரு நகைச்சுவை திரைப்படம் எடுத்தால்தான் அந்த படம் வெற்றி பெறும். ஆனால், நகைச்சுவை திரைப்படத்தை எடுப்பது எளிதான விஷயம் இல்லை. அதேபோல அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுகிறது. என்னை பொறுத்தவரை ரவி மோகன் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் என்று தான் சொல்லுவேன் என பாலாஜி பாபு இந்த பேட்டியில் பேசி உள்ளர்.


Click it and Unblock the Notifications











