நடிகர் சங்க பணத்தை விழுங்கிய விஷால்.. வங்கி கடனில் கட்டப்படும் கட்டிடம்.. பயில்வான் சொன்ன தகவல!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்து வந்த வந்த அபிநாய், விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்து இருந்தார். இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போக, சாப்பாட்டுக்கே வழியில்லாமல், தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்தார். அண்மையில் இவர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சின்னத்திரை நடிகர் பாலா ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்தார். மற்ற நடிகர்கள் யாரும் உதவி செய்யாத நிலையில் இதுகுறித்து Frontvoods TV யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், முதலில் அபினய் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா என்பது தெரிய வேண்டும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான், உதவி கிடைக்கும் என்று இல்லை. ஆனால், இப்போது நடிகர் சங்கத்திலேயே பணம் இல்லாததால் அப்படி ஒரு நிலைமை உருவாகிவிட்டது. நடிகர் சங்க பணத்தை எல்லாம் விஷால் சுருட்டி விட்டார். நடிகர் சங்கத்தில் தற்போது சுத்தமாக பணமே இல்லை கல்யாணம் மண்டபம் கட்டுவதற்கு கூட வங்கியில் இருந்து லோனை வாங்கித்தான் கல்யாண மண்டபம் கட்டி வருகிறார்கள்.

Abhinay Bayilvan Ranganathan interview
Photo Credit:

உயிருக்கு போராடும் அபினய்: ஆனால், அபினய் நடித்த முதல் திரைப்படத்தின் ஹீரோ, தனுஷ் அவர்கள் அபினய்க்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து நிதி உதவி அளித்து இருக்கிறார். நடிகர்கள், நடிகைகளுக்கு நிலையான சம்பளம் வருவதில்லை, பட வாய்ப்பு இருந்தால் அதிகமாக சம்பளம் வரும் படம் வாய்ப்பு இல்லை என்றால் சம்பளமே வராது. அப்படி இருக்கும் போது, நன்றாக சம்பாதிக்கும் போது, சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை முன்பை இன்சூரன்ஸ் செய்து வைத்திருக்க வேண்டும் அதை யாரும் செய்வதில்லை.

பயில்வான் ரங்கநாதன்: அபினய் தற்போது ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு திருமணமாகிவிட்டதா, மனைவி இருக்கிறாரா? குழந்தை இருக்கிறாரா என்று எதுவுமே தெரியவில்லை. ஒருவேளை இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இவருடைய மனைவி இவரை விட்டு கூட சென்று இருக்கலாம் அவரது குடும்பம் பற்றி சரியான தகவல் யாருக்குமே தெரியவில்லை. 90 காலகட்டத்தில் அவர் இல்லாத விளம்பரமே இருக்காது, அப்படி பிஸியாக நடித்தும் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது, அதை ஏன் அவர் சேமித்து வைக்க வில்லை. இன்றைய காலத்தில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் அவர்களுக்கு குடி பழக்கம் வந்து விடுகிறது. இதுதான் பல நடிகர்களின் உடல் நிலை மோசமாவதற்கு காரணம் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X