இருவருக்குமே பாடி டிமாண்ட்.. காசுக்காக ஜாய் கிரிஸில்டா செய்யும் வேலை.. வன்மத்தை கொட்டிய பயில்வான்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் விசாரணைக்காக நேற்று ஆஜரானார்.
அவரிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜாய்,
பல youtube தளத்தில் என்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசுகிறார்கள். பணத்திற்காக என்னை பற்றி தவறாக பேசாதீர்கள், நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை பற்றி அவதூறாக பேசினால். இந்த குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது என்றார்.
இதையடுத்து, Metro Mail சேனவில் பேசிய ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்தபோதே, நான் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கு தான் ஆதரவு பேசி இருந்தேன். ஏனென்றால், மாதம்பட்டி ரங்கராஜ், விவாகரத்தானா, விதவைப் பெண்களுடன் தான் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்வார். இரண்டு வருடம் அவர்களுடன் பழகி விட்டு பின் விட்டு விடுவார். அது மட்டுமில்லாமல், அவர் திருமணமானவர், அவரது மனைவி ஒரு வழக்கறிஞர், இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஜாய் கிரிஸில்டா, அவருடன் பழகியதே தவறு, குற்றம். இரண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதனால் தான் இருவரும் நெருங்கி பழகினார்கள். ஆனால், திருமணமானவர் நெருங்கி வரும்போது, போடா வேலையை பார்த்துக் கொண்டு என்று, அவனை துரத்தி விட வேண்டியது தானே, அதை ஏன் ஜாய் கிரிஸில்டா செய்யவில்லை.

பாடி டிமெண்ட்: இந்துக்கள் சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தி தான், ஜாய் போட்டு இருக்கும் வழக்கு எடுபடாது, முதல் மனைவியின் விருப்பத்தின் பேரில், கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் சொத்தில் எந்தவித பங்கும் கிடையாது. இருவரும் திருமணம் செய்து கொண்டபடி போட்டோ எடுத்து விட்டால் அது திருமணமாகிவிடுமா, அந்த கோயிலில் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்தார்களா? அது திருமணமே இல்லை, திருமண மாதிரி, திருமண நாடகம். மாதம்பட்டி ரங்கராஜின் எண்ணமே தன்னுடைய கருவை ஜாய் கிரிஸில்டா வயிற்றில் சுமக்க கூடாது என்பது தான். மனைவியாக வேண்டுமானால் இரு, இருவரும் சந்தோஷமாக இருப்போம். ஆனால், கருவை சுமக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள்.
பணத்திற்காக: அதனால், தான் இரண்டு முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரை ஏமாற்றி ஜாய் கிரிஸில்டா திட்டம் போட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறாள். அதற்கு காரணம் மாதம்பாட்டியிடம் இருக்கும் பணம். அந்த பணத்தை அபகரிப்பதற்காக தான் கர்ப்பமாகி இப்படி பிளாக் மெயில் செய்கிறார். ஜாய் கிரிஸில்டா, ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விவகாரத்துக்கு பெற்றவர். அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் கர்ப்பமாக வேண்டிய அவசியம் என்ன? அதற்கு காரணம் மாதம்பட்டி இடம் பல கோடியில் சொத்து இருக்கிறது. அந்த சொத்துக்காவும், பணத்திற்காகவும் செய்யும் பிளாக் மெயில் என்று பயில்வான் அந்த பேட்டியில் ஜாய் கிரிஸில்டாவை பெண் என்று பார்க்காமல் கடுமையாக விமர்சித்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள், பொம்பளைங்களை தப்பு தப்பா பேசி நீ பணம் சம்பாதிக்கிறார், இது எல்லாம் ரொம்ப பாவம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











