ஜாய் கிரிஸில்டா மேலதான் தப்பு .. மாதம்பட்டி ரங்கராஜ் பணத்தை கொடுத்து சரிகட்டிவிடுவார்.. பயில்வான்!

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இணையத்தில் போட்டோக்கள் வெளிவந்தன. அதைத்தொடர்ந்து இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதனை எடிட் செய்ததே மாதம்பட்டி ரங்கராஜ் என்று அவரை டேக் செய்திருக்கிறார். இது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நான் ஏற்கனவே சொன்னது போல மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவே மாட்டார். ஏனென்றால் அவரின் முதல் மனைவி வழக்கறிஞர். ஆனால், இரண்டாவது மனைவி என்ன சொல்லிக் கொள்ளும் அந்தப் பெண், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் இருவரும் அவ்வப்போது போட்டோவை பகிர்ந்து வருகிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக போட்டோவை வெளியிட்டு இருந்தார்கள் அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த திருமணம் செல்லாது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி கோவிலில் இருந்து ஒரு ஓரத்தில் திருமணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடி ஆகாது.

madhampatty rangaraj Bayilvan ranganathan joy crizildaa
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ்: இந்துமத அறநிலையத்துறையிடம் இருந்து, விண்ணப்பம் வாங்கி அதில், பெண்ணுக்குறியோர் மாப்பிள்ளைக்குரியோர் என இருவரும் கையெழுத்திட்டு, அதன் பிறகு சாட்சிகள் கையெழுத்து விட்டால் தான் இந்து தர்மப்படி அந்த திருமணம் ஏற்றுக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது ஒரே அறையில் நின்று கொண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டது எப்படி திருமணமாகும். அதுமட்டுமில்லாமல் முதல் மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஜாய் கிரிஸில்டாவின் தப்பு தான்: ஜாய் கிரிஸில்டாவிற்கு மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரிந்து எப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எப்படி கர்ப்பமானார். இது எல்லாம் ஜாய் கிரிஸில்டாவின் தப்பு தான். அவர் தான் தனது இன்ஸ்டாகிராமில் திருமணமாகிவிட்டது, ஆறு மாத கர்ப்பம் என பதிவிட்டு வருகிறார். இதுவரை, மாதம்பட்டி ரங்கராஜ் அதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. தனது முதல் மனைவி ஸ்ருதியின் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார். அதன் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்து விட்டார். இதன் மூலம் இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார்.

பணத்தை கொடுத்து சரிகட்டிவிடுவார்: இரண்டாவது மனைவி என சொல்லிக்கொள்ளும் ஜாய் கிரிஸில்டா தான் மாதம்பட்டியை பிளாக் மெயில் செய்து மிரட்டி வருகிறார். அது பெயருக்காகவோ இல்லை பணத்திற்காகவோ கூட இருக்கலாம். மாதம்பட்டி ரங்கராஜ், இதற்கு முன் விவாகரத்தான பல பெண்களுடன் உறவில் இருந்தார். அதுப்போலத்தான் ஜாய் கிரிஸில்டாவுடன் பழகி இருக்கிறார். ஆனால், இந்த பெண் தான், கர்ப்பமாக இருப்பதை மறைத்து ஆறு மாதம் கழித்து வெளியில் சொல்லி இருக்கிறது. முன்பே தெரிந்து இருந்தால், ஒருவேலை தெரிந்து இருந்தால், மாதம்பட்டி ரங்கராஜ் உஷராக இருந்து இருப்பார். ஆனால், விஷயம் கையை மீறி சென்றுவிட்டதால், இப்போது அமைதியாக இருக்கிறார். இதற்கு மேல் ஜாய் கிரிஸில்டா பணத்தை கொடுத்து சரிகட்டிவிடுவார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X