»   »  பரத்தின் படிக்காதவன் ஆசை

பரத்தின் படிக்காதவன் ஆசை

Subscribe to Oneindia Tamil

ரஜினி படத்தைப் பிடித்துத் தொங்கும் இளவட்ட நடிகர்கள் வரிசையில் பரத்தும் சேருகிறார்.

ரஜினி படங்களை ரீமேக் செய்யும் மோகம் கோலிவுட்டில் படு வேகமாக அதிகரித்து வருகிறது. பில்லாவை அஜீத் நடிக்க பில்லா 2007 என்ற பெயரில் உருமாற்றப் போகிறார்கள். முரட்டுக்காளையில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஜானி படமும் ரீமேக் ஆகப் போகிறது. இதிலும் அஜீத்தை நடிக்க வைக்க ஆயத்தமாகி வருகிறது கோலிவுட். மிஸ்டர் பாரத்தை லேசாக மாற்றி திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் மாப்பிள்ளை தனுஷ் நடித்து முடித்து விட்டார்.

இதேபோல ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களான ரங்கா, பொல்லாதவன் ஆகிய டைட்டில்களை தனுஷ் பதிவு செய்து வைத்துள்ளார்.

இப்போது ரஜினியின் படிக்காதவன் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுவதாக பரத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் உரிமை கன்னட நடிகர் ரவிச்சந்திரனிடம் உள்ளது. ரவி, ரஜினியின் நெருங்கிய நண்பர், கன்னடத்தில் வித்தியாசமான படங்களைக் கொடுத்து கன்னடப் படவுலுகுக்கு புதுமுகம் கொடுத்தவர்.

இந்த நிலையில் படிக்காதவன் படத்தின் ரீமேக்கில் நடிக்க பரத் விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தி காதுக்கு வந்ததும் பரத்தைப் போனில் பிடித்தோம். என்ன தலைவா நிஜமா என்று கேட்டபோது, இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன்.

இதனால் புதுப் படம் எதையும் ஒப்புக் கொள்ளும் ஐடியா இல்லை. ஆனால் ரஜினி படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க ஆசையாக உள்ளேன். அவருடைய படிக்காதவன் மிகச் சிறந்த படம். அந்தப் படத்தை நான் ஒருமுறை, இருமுறை அல்ல 25 முறை (மெய்யாலுமா?) பார்த்து ரசித்துள்ளேன்.

இளம் நடிகர்கள் ரஜினியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக படிக்காதவன் படத்தை பார்த்தே தீர வேண்டும். அதில் அவருடைய ஸ்டைல், காமெடி சென்ஸ், சண்டைக் காட்சிகள், உணர்ச்சிவயப்படும் காட்சிகள் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருப்பார்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு அந்தப் படம் ஒரு பாடம். அந்தப் படத்தை யாராவது ரீமேக் செய்தால் அதில் நடிக்க நான் உடனே டேட்ஸ் கொடுப்பேன் என்றார் பரத்.

லச்சுமி, சீக்கிரமா ஸ்டார்ட்! ஸ்டார்ட்!!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil