»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் ரொம்ப அதிகமாக இருப்பதாக வருத்தப்படுகிறார் நடிகை பாரதி.

சின்ன விஷயத்தைக் கூட கண், காது, மூக்கு வைத்து பெரிசுபடுத்துகிறார்கள் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இந்த அழகிய ராட்சசி.வயசுப் பசங்க என்ற படத்தில் அறிமுகமாகி இப்போது தமிழில் 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பெண்களைக் குறிவைத்து பக்திப் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த பாரதிகண்ணன், இளைஞர்களைக் குறிவைத்து வயசுப் பசங்கபடத்தை எடுத்தார்.

ரிலீஸான வேகத்தில் படப்பெட்டி பெளன்ஸாகி, தயாரிப்பாளரையே தஞ்சமடைந்தது. படம் தோல்வியடைந்தாலும், இந்தப் படத்தின்மூலம் அறிமுகமான பாரதிக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது

காரணம் வகை தொகையில்லாமல் இவர் காட்டும் கவர்ச்சிதான். அக்மார்க் தமிழ்ப் பெண்ணான இவர், மும்பை நடிகைகளுக்கு சவால்விட்டு ஆடைக்குறைப்பு செய்ததால் அடுத்து 2 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தவரை, தேவயானியின் காஸ்டியூமரான மாசனம் தான் சினிமாவிற்கு இழுத்து வந்தார்.

மாசனம் மூலம் பாரதியின் ஸ்டில்களைப் பார்த்து பிரமித்த இயக்குனர் பாரதிகண்ணன் வயசுப் பசங்க படத்தில் ஒப்பந்தம் செய்தார். அதோடுபுவனேஸ்வரி என்ற பெயரை சினிமாவுக்காக பாரதி என்று மாற்றினார்.

விந்தியா மற்றும் பாரதியின் கவர்ச்சி ஸ்டில்களால் பூஜை போட்ட அன்றே படம் சேல்ஸ் ஆகி விட்டது. ஆனால் படம் ரீலிஸாகி ஓடவில்லை.

இதனால் வருத்தமா என்று பாரதியிடம் கேட்டால்,

வயசுப் பசங்க ரிலீஸானபோது, என்மீது உறவினர்கள், நண்பர்கள் கோபப்பட்டனர், இவ்வளவு கிளாமராக நடித்திருக்கிறாயே என்று.அடுத்தடுத்து இதேபோல்தான் படங்கள் வரும் என்று பயமுறுத்தினார்கள்.

அதுபோலவே அடுத்த வந்த 4 படங்களும் கிளாமர் படங்களாகவே வந்தன. அதிலும் இரண்டு படங்களில் டிரஸ்சுக்கே வேலையில்லைஎன்றார்கள். இதனால் அந்தப் பட வாய்ப்புக்களை மறுத்துவிட்டு இரண்டில் மட்டும் நடிக்கிறேன்.

அதில் ஒரு படத்தின் பெயர் கலக்கல். இன்னொரு படம் வில். கலக்கல் படத்தில் மாடலிங்செய்யும் பெண்ணாக நடிக்கிறேன். வில் ஒருயூத்புல்லான கதை.

இந்தப் படங்களில் கவர்ச்சியோடு நடிப்பதற்கும் நல்ல வாய்ப்புள்ளது. இதை நான் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

வயசுப் பசங்க பட சூட்டிங்கில் சக நடிகர்களுடன் நான் சகஜமாகப் பேசியதை கண், காது வைத்துப் பேசினார்கள். இது என்னை மிகவும்பாதித்துவிட்டது. இருப்பதைப் பேசினால் சந்தோஷப்படலாம். இல்லாததைப் பேசினால் சங்கடம்தானே.

சினிமா உலகம் வெளியில் இருந்து பார்க்கும்போதுதான் பிரகாசமாகத் தெரியும். அதன் இருட்டு உள்ளே இருப்பவர்களுக்குத்தான்தெரியும் என்று சோகமாகச் சொல்கிறார் பாரதி.

என்ன நடந்ததோ....!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil