பாரதிராஜாவிற்கு ஞாபக சக்தியே இல்லை... மனோஜ் போன கவலையிலேயே இருக்காரு.. தம்பி வேதனை
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். தந்தையைப்போல இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட மனோஜ், 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ் மஹால்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் படத்தில் நடித்திருந்த மனோஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மனோஜ் உயிரிழந்து 5 மாதத்திற்கு மேலான போதும், அந்த துயரத்தில் இருந்து யாரும் மீளவே இல்லை என பாரதிராஜாவின் சகோதரர் பேட்டி அளித்துள்ளார். அதில், மகன் மனோஜின் இறப்பை பாரதிராஜாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் அந்த இறப்பிலிருந்து அவர் மீளவில்லை. இதை மறப்பதற்காக, என்னுடைய மகள் அவரை மலேசியாவிற்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்பட்டு கொஞ்ச நாள் அங்கே இருந்துவிட்டு வந்தார். மலேசியா சென்றபோதும் அவருக்கு மனோஜின் நினைப்பாக தான் இருந்தது. மனோஜின் இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பெயர் இருக்கு, புகழ் இருக்கு பணம் இருக்கு அனைத்தும் விருந்தும் மகன் இல்லையே என்ற வருத்தம் அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வேதனை அவர் சாகும் வரையில் இருக்கும்

மகன் போன கவலையில் பாரதிராஜா: எப்பொழுதுமே மனோஜின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்து படியே இருக்கிறார். அவருக்கு எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியவில்லை. ஞாபக சக்தியே இல்லை, மகன் இறப்பில் இருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. இறைவன் தான் அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும். அவர் மட்டுமில்லை அண்ணி, மனோஜின் மனைவி வந்தனாஇ குழந்தைகள் என அனைவருமே அவரது இறப்பை நினைத்து இன்னும் வருத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரையில் மனோஜ் இன்னும் இறக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எங்கே பார்த்தாலும் அவன் நிற்பது போலவும், அவனுடன் நான் பேசிக் கொண்டே இருப்பது போலவும் என் மனம் நினைக்கிறது. ஐந்து வருடமாக என் தோளில் போட்டு வளர்த்தேன் அதை என்னால் மறக்கவே முடியவில்லை.
பாரதிராஜாவின் சகோரர்: என் மருமகள் வந்தனாவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை, எப்பொழுதும் ஏதோ ஒரு சோகத்திலேயே அவள் இருக்கிறாள். மருமகளை பார்க்கும் போதெல்லாம் மனது கஷ்டமாக இருக்கிறது. யாருமே நினைத்துப் பார்க்க முடியாத திடீர் இழப்பால் அவர்கள் அனைவரும் உடைந்து போய் இருக்கிறார்கள். இறைவன் தான் அவர்களுக்கு மன தைரியத்தை அளிக்க வேண்டும் என பாரதிராஜாவின் சகோதர் சகோரர் கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











