»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சு.தா. அறிவழகன்

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுவது குறித்து விவாதிக்க தமிழ் திரையுலகின் பல்வேறுஅமைப்புகளின் கூட்டுக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தீவிர முயற்சியால் இக் கூட்டம் நடக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கர்நாடகத் திரையுலகினர் மற்றும் தமிழ்நிாட்டில் இருந்துகொண்டு தமிழர் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கும் கன்னட கலைஞர்களுக்கு எதிராகவும் துணிச்சலாககுரல் கொடுத்தவர் பாரதிராஜா.

அவரை "தட்ஸ்தமிழ்.காம்" செய்தியாளர் நேற்று சிறப்புப் பேட்டி கண்டார். அப்போது பாரதிராஜா கூறியதாவது:

எனது படப்பிடிப்புகள் இனிமேல் கர்நாடகத்தில் நடக்க வாய்ப்பு இருக்காது. எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லைஎன்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. அப்படி நினைத்திருந்தால், அப்பாவி விவசாயிகளுக்காக குரல்கொடுத்திருக்க மாட்டேன். எதையும் சந்திக்க நான் தயார்.

மைசூர் பகுதியை அருமையான ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியதே நான் தான். எனது படப்பிடிப்புகள் அனைத்தும்அங்கு தான் நடந்துள்ளன. அந்தப் பகுதியை அருமையாக போக்கஸ் செய்ததே நான் தான்.

அப்பாவி தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். காவிரி அவர்களது உயிர்ப்பிரச்சினை.

யாருமே குரல் கொடுக்காவிட்டால் எப்படி? அவர்களது உப்பைத் தின்றவர்கள் நாங்கள். அவர்களுக்காக நாங்கள்போராடித் தான் ஆக வேண்டும்.

இதுதொடர்பாக சென்னையில் நாளை (புதன்கிழமை) அனைத்துத் திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.

இதில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளோம். முதல்வரிடம் மனு கொடுப்பதா அல்லது எந்த மாதிரியான போராட்டம்நடத்துவது என்பது குறித்து அப்போது முடிவு செய்வோம் என்றார் பாரதிராஜா.

திரையுலகம் கூடுமா?:

காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்குவது தொடர்பாக விவாதிப்பதற்காகஇந்தக் கூட்டம் நடக்கிறது.

இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்இதில் பங்கேற்கின்றன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தான் இக்கூட்டம் நடக்கிறது. இயக்குநர் பாரதிராஜா தவிர வி.சேகர், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் இதில் பங்கேற்பதாக உறுதிமொழி தந்துள்ளனர்.

கன்னடத் திரையுலகம் சார்பில் காவிரிப் பிரச்சினைக்காக பேரணி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் யாருமே வாய் திறக்காத நிலையில் பாரதிராஜா மிகவும் துணிச்சலாக அறிக்கை விட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் சங்கம் கூட்டம் போட்டு, போராட்டம் நடத்துவதில்லை என்று முடிவு செய்தது.

இந்த சூழ்நிலையில் தமிழ் திரையுலகின் அனைத்துப் பிரிவினரின் கூட்டத்தை பாரதிராஜா கூட்டியுள்ளார்.

இன்று தமிழ்த் திரைப்படத் தயாப்பாரிளர்கள் சங்க அலுவலகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil