»   »  பறக்கும் பாவனா!

பறக்கும் பாவனா!

Subscribe to Oneindia Tamil

கூடல் நகரில் தனது கேரக்டர் சுருக்கப்பட்டு விட்டதால் வருத்தத்தில் இருந்த பாவனா, மலையாளத்தில் நடித்த சோட்டா மும்பை ஹிட் ஆனதால் படா சந்தோஷமாக மாறியிருக்கிறார்.

ரொம்ப நாட்களாக எடுக்கப்பட்டு வந்த படம் கூடல் நகர். பரத் இரட்டை வேடத்தில் தூள் கிளப்ப அவருக்கு ஜோடி போட்டு சந்தியாவும், பாவனாவும் நடித்திருந்தனர்.

நீண்டகால தயாரிப்புக்குப் பின்னர் ஒரு வழியாக கூடல் நகர் வெளியானது. பரத்தின் இரட்டை வேட நடிப்பும், சந்தியாவின் நடிப்பும் பேசப்பட்டன. ஆனால் பாவனா ரோல்தான் படு பாவமாக இருந்தது.

இப்படி ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க எப்படி பாவனா ஒத்துக் கொண்டார் என்று பலரும் நினைத்தார்கள், இதுகுறித்து பாவனாவிடமே நேரிலும் கேட்டு அனுதாபம் தெரிவித்தனர்.

இந்த கேரக்டர் வதம் குறித்து பாவனாவும் கூட வருத்தமாகத்தான் இருக்கிறாராம். எனது கேரக்டர்தான் படம் முழுக்கப் பேசப்படும் என சொல்லித்தான் புக் செய்தார் சீனு ராமசாமி. ஆனால் திடீரென எனது கேரக்டரை கெஸ்ட் ரோல் போல சுருக்கி விட்டார். ஏன் செய்தார் என்று தெரியவில்லை. இதில் எனக்கு சின்ன வருத்தம்தான் என்கிறார் பாவனா.

ஆனால் அவரது கவலையைப் போக்கும் விதமாக மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை வெற்றிப் படமாகியிருக்கிறதாம். இதில் பாவனா ஃபிளையிங் லதா என்ற கேரக்டரில் கலக்கியுள்ளார். அதுவும் எப்படி ஆட்டோ டிரைவராக.

சோட்டா மும்பை ஹிட் ஆனதைத் தொடர்ந்து பாவனாவுக்கு ஃபிளையிங் லதா என்றே பெயர் வைத்து விட்டனராம். இதனால் படு சந்தோஷமாகியிருக்கிறார் பாவனா.

கெட்டதுலயும் ஒரு நல்லது என்பது இதுதானோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil