»   »  பாவனா வழி.. சாவித்ரி வழி!

பாவனா வழி.. சாவித்ரி வழி!

Subscribe to Oneindia Tamil

நடிகையர் திலகம் சாவித்ரிதான் எனது ரோல் மாடல். அவரைப் பின்பற்றி நடிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் பாவனா.

கிழக்குக் கடற்கரைச் சாலை சரியாக போகாத விசனத்தில் இருந்து வந்த பாவனாவுக்கு ஆர்யா படத்தின் வெற்றி சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் ரவுடியின் தங்கச்சியாக, பொம்பளை சண்டியராக வந்து சிலம்பிய தனது நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்ததால் கூடுதல் சந்தோஷத்துடன் குஷியாக உள்ளார்.

சந்தோஷத்தில் மூழ்கியிருந்த பாவனாவிடம் பேசினோம். எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது எனக்கு முக்கியமில்லை. எனது கேரக்டர், பட யூனிட் குறித்துத்தான் நான் அதிகம் அக்கறை காட்டுகிறேன்.

நான் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தாலும் கூட தமிழில் நடிப்பதையே பெருமையாக கருதுகிறேன். தமிழ் இயக்குநர்கள் நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தங்களது படங்களில் பெண்களின் கேரக்டர்களை கெளரவத்துக்குரியதாக காட்டுகிறார்கள். அதனால்தான் தமிழில் அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.

சமீபத்தில் சாவித்ரி நடித்த சிலபடங்களைப் பார்க்க நேர்ந்தது. அருமையான நடிகை அவர். அவரது பன்முகத் திறமையைப் பார்த்து வியந்து போனேன். இனிமேல் அவரது ஸ்டைலைத்தான் நான் எனது படங்களில் பின்பற்றப் போகிறேன் என்றார்.

அடுத்து ஜீவாவுடன் ராமேஸ்வரம் படத்தில் நடிக்கிறார் பாவனா. இதற்காக விரைவில் வியட்நாம் செல்கிறார். ஜீவா, பாவனாவுடன் 6 பேர் கொண்ட படப்பிடிப்புக் குழுவும் வியட்நாம் பறக்கிறது. அங்கு ஒரு பாட்டு மற்றும் சில காட்சிகளை படமாக்கப் போகிறார்கள்.

ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் அல்லல்படும் இலங்கைத் தமிழர்கள் குறித்த கதை இது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil