»   »  வெட்கம் அறியா பாவனா!!

வெட்கம் அறியா பாவனா!!

Subscribe to Oneindia Tamil

பாவனாவுக்கு நடிக்க ரொம்ப கஷ்டத்தைக் கொடுக்கும் விஷயம் எது தெரியுமா? வெட்கம்தானாம்!

ேகரளத்து பப்பாளி பாவனாவைக் கொஞ்ச நாளாக தமிழில் காணோம். கடைசியாக அவர் நடித்து வெளியான படம் வெயில். இப்போது தமிழகத்திலும் வெயில் காலம் வந்து விட்டது. அடுத்து வரப் போவது கூடல் நகர். இந்தப் படம் முடிந்து விட்டது.

தற்போது மலையாளத்துக்குப் ேபாய் விட்டார் பாவனா. அங்கு மோகன்லாலுடன் இணைந்து நடித்துக் ெகாண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஆட்டோ எல்லாம் ஓட்டி அசத்துகிறாராம். இதற்காக ஆட்டோ ஓட்டக் கற்றுக் ெகாண்டாராம்.

கூடல் நகரில் சூப்பராக நடித்துள்ளேன் என்று சந்ேதாஷமாக கூறுகிறார் பாவனா. அவருக்கும், சந்தியாவுக்கும் நடிப்பில் கடும் போட்டியாம். இருந்தாலும் இது ஆேராக்கியப் போட்டி, அடிதடிக்கு வாய்ப்பே இல்லை என்கிறார் (அதானே, சேச்சிகள் அடிச்சுப்பீங்களா!)

கூடல் நகர் படத்தில் பல காட்சிகளில் வெட்கப்படுவது போல நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் அப்படி நடிக்க முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டாராம் பாவனா. திகிலாகிப் போய் நீங்க பாவனாவா இல்லை பாவாணனா? என்றோம் சந்ேதகமாக.

அய்ேயா, நீங்க நினைப்பது போல இல்லை சேட்டா. இயற்கையிலேயே எனக்கு பயப்படத் தெரியாது, வெட்கப்படத் தெரியாது. நான் ஒரு ஜாலி பிளஸ் சவடால் பேர்வழி.

சண்டை போடப் பிடிக்கும், கத்திக் கூச்சல் போடுவேன். யாராவது சிக்கினால் கலாய்த்து விடுவேன். ஆனால் வெட்கமோ, கூச்சமோ எனக்கு கிடையவே கிடையாது, அதற்கு அர்த்தமும் தெரியாது. அதனால்தான் வெட்கப்படுவது போன்ற காட்சியில் நடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது என்றார் கூலாக.

இயக்குநர் எழிலும், பாவனாவை வெட்கப்பட வைத்து கஷ்டப்பட்டு அந்த சீன்களை எடுத்து முடித்தாராம். இதற்காக ெராமான்டிக்கான காட்சிகளை அவரிடம் விளக்கியும், அதுேபான்ற படக் காட்சிளைப் பார்க்க வைத்தும் வெட்கத்தை வெளியில் எடூத்தார்களாம்.

சரிதான், பாவனாவிடம் மாட்டப் போகும் சேட்டன் நிலைமை ரொம்பக் கஷ்டம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil