»   »  கிளாமரும் தெரியும் - பாவனா

கிளாமரும் தெரியும் - பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bhavna
கிளாமரும் தெரியும் - பாவனா: குடும்பப் பாங்காக மட்டும்தான் எனக்கு நடிக்கத் தெரியும் என்று யாரும் முடிவு கட்டி விட வேண்டாம். முகம் சுளிக்காத வகையில் கிளாமரிலும் நான் கலக்குவேன் என்கிறார் பாவனா.

சின்ன இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் பிசியாகியுள்ளார் பாவன். மாதவன் நடிக்க, சீமான் இயக்க உருவாகியுள்ள வாழ்த்துக்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வினய்க்கு ஜோடியாக ஜெயம் கொண்டான் படத்தில் நடிக்கக் கிளம்பியுள்ளார்.

இடையில் ஒண்டரி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் கோபிசந்த். நம்ம ஊர் ரமணாதான் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் விளையாடியுள்ளாராம் பாவனா.

அப்படியா பாவனா என்று அவரிடம் கேட்டபோது, கற்பனை செய்து பார்க்கும் அளவுக்கு மிதமிஞ்சிய கவர்ச்சியெல்லாம் காட்டி நடிக்கவில்லை. முகம் சுளிக்காத வகையில்தான் கிளாமர் காட்டியுள்ளேன். அதில் தவறேதும் இல்லை.

என்னால் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க முடியும் என சிலர் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் என்னால் கிளாமராகவும் நடிக்க முடியும். முகம் சுளிக்காத வகையில் கிளாமர் காட்டி நடிப்பதில் தவறில்லை.

தமிழிலும் இதுபோல டீசன்ட்டான கிளாமர் காட்டி நடிக்க ஆர்வமாகவே உள்ளேன். ஆனால் அப்படிப்பட்ட கதைகள்தான் இன்னும் என்னைத் தேடி வரவில்லை என்றார் பாவனா.

இனிமேல் விதம் விதமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம் பாவனா.

மலையாளத்தில் சுத்தமாக ஒருபடமும் இல்லையாம் பாவனாவிடம். ஆனால் அதற்காக அவர் வருந்தவில்லை. தமிழில் நிறைய வாய்ப்புகள் வருவதால், அதிலிருந்து செலக்ட் செய்து நடித்தாலே போதும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil