»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்குகளில் சிக்கி படாதபாடு பட்ட பூனைக் கண்ணழகி புவனேஸ்வரி, திரையுலகைச் சேர்ந்த ஒருவரைகாதலிக்கிறாராம்.

காந்தப் பார்வை, கச்சிதமான உடலுடன் டி.வி சீரியல்களில் வில்லி வேடங்களில் தூள் பறத்திக் கொண்டிருந்தவர்,கொண்டிருப்பவர் புவனேஸ்வரி. அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வருகிறார். நடிக்க வந்ததில் இருந்தே, விபச்சாரம்செய்கிறார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவரும் அதை மறுத்தே வந்தார்.

அதே போல செக்ஸ் டாக்டர் பிரகாஷின் வீடியோக்களிலும் இவர் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையும் மறுத்து வந்தார்.

ஆனால் நீண்ட நாட்களாக கண்ணி வைத்த போலீஸார் இவரை ஒரு நாள் விபச்சார வழக்கில் அமுக்கிப் பிடித்தனர். இருப்பினும்நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாததால், வினிதாவைப் போல இவரும் விடுதலையானார்.

விபச்சார வழக்கில் பாப்புலராக இருந்தபோது பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் பலான தொழில்செய்யும் பெண்ணாக வந்து கவர்ச்சியில் கலக்கினார். ஆனால், இந்தக் காட்சிகளுக்கு எழுந்த கடும் எதிர்ப்பால், இரண்டாவதுநாளே அந்தக் காட்சிகளின் பெரும்பாலான பகுதிகளை தியேட்டர்களுக்கு ஆள் அனுப்பி கட் செய்துவிட்டார் இயக்குனர் ஷங்கர்.

இதற்குப் பின் அதிகமாக தமிழ் சினிமாவில் தலைகாட்டவில்லை புவனேஸ்வரி. அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் கிளாமர்வேடங்களில் அவ்வப்போது அசத்தி விட்டு வருகிறார்.

தமிழில் அவர்கள், ராஜராஜேஸ்வரி, சொர்க்கம் ஆகிய டிவி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏன்நடிப்பதில்லை என்று கேட்டபோது,

தமிழிலும் கிளாமராக நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் இதுவரை அமையவில்லை. ஒருபாடலுக்கு மட்டும் கிளாமராக ஆடுவதில் எனக்கு விருப்பமில்லை. கேரக்டருடன் கவர்ச்சி காட்டி நடிக்கவே எனக்கு விருப்பம்.

சில பிரச்சினைகளால் நானே நடிப்பதை நிறுத்தியிருந்தேன். கதாநாயகியாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என் ரசிகர்கள்(?!) என்னிடம் எதிர்பார்ப்பது அதை அல்ல. நான் அழுவது எனது ரசிகர்களுக்குப் பிடிக்காது. நான் வில்லியாக வந்துமிரட்டுவதைத்தான் அவர்கள் ரசிக்கிறார்கள்.

நான் சீரியலில் போடும் டிரஸ், நகை ஆகியவற்றைப் பார்த்து பெண்கள், கல்லூரி மாணவிகள் அதேபோல் இருக்கிறதா என்றுகடைகளில் கேட்டு வாங்குகிறார்கள். சின்னத்திரை ஒரு சின்ன உலகம்தான் என்றாலும், இதில் எனக்கு பெரிய கிரேஸ் இருக்கிறது.

விபச்சார வழக்கினால் எனக்கு ஏற்பட்ட மனப்புண் எப்போதும் ஆறாது. விரோதியைக் கூட மன்னிக்கலாம். நம்பிக்கைதுரோகியை மன்னிக்கவே முடியாது. விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டபோது, எனக்கு உதவி செய்த ஏவிஎம் நிறுவனத்துக்குஎன்றென்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்று டென்சனான புவனேஸ்வரியிடம்,

நீங்க காதலில் இருப்பதா சொல்றாங்களே என்று ரூட்டை மாற்றினோம்,

கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்ட புவன்ஸ், நான் கட்டாயம் காதல் திருமணம்தான் செய்வேன். இப்போது ஒருவரைகாதலித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

அப்படியா.. யார் அவர் என்றபோது, அவர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்று மட்டும் பதில் சொன்னார்.

எந்தக் கேள்வி கேட்டாலும் பளிச்சென்று பதில் சொல்லும் புவனேஸ்வரி, சங்கரன்கோவில் என்ற ஊர் பெயரை சொன்னால்மட்டும் முகம் வெளிறிப் போகிறார். அப்படி என்ன ரகசியமோ சங்கரன்கோவிலில்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil