மார்பகத்தை பெரிதாக்க சர்ஜரி.. காசுக்காகத்தான் எல்லாம்.. பிக் பாஸ் அரோரா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி இருவர் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பார்வதி, திவாகர், கம்ருதீன், அப்சரா என ஆறு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரோரா, துஷாராவுடன் சுற்றி வரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருக்கும் நிலைகள், தற்போது பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோராவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் பல விஷயத்தை பேசி இருக்கும் அரோரா, சமையல் நிகழ்ச்சி செய்பவர்களின் வீடியோக்களை பார்த்த இணையவாசிகள் எவ்வளவு உப்பு போட வேண்டும் என சந்தேகங்களை கேட்பார்கள். அதேபோலதான் என்னுடைய கிளாமர் வீடியோவை பார்ப்பவர்களும் பல சந்தேகங்களை கேட்கிறார்கள் அதற்கு என்னால் முடிந்தால் பதில் சொல்லுவேன் இல்லை என்றால் பதில் சொல்ல மாட்டேன். எனக்கு பலூன் அக்கா என்று பெயர் வைத்ததில் விருப்பமே இல்லை. அக்கா என்று அழைத்து விட்டு, எப்படி அவர்கள் ஆபாசமாக பார்க்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இதைவிட ஆபாசமாக பெயர் வைக்கவில்லையே என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

Bigg boss tamil season 9 Arora Sinclair 9
Photo Credit:

பிக் பாஸ் அரோரா : நான் மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக அறுவை சிகிச்சை செய்தேன் என பலரும் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் நான் எந்த விதமான அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. என்னை கவர்ச்சியாக காட்ட என்ன ப்ராவை பயன்படுத்த வேண்டும் என்பது எனக்கும் தெரியும், பேஷன் டிசைனர் அவர்களுக்கும் தெரியும் அப்படி கவர்ச்சியாக காட்டக்கூடிய ப்ராவை பயன்படுத்தி தான் போட்டோஸ் மற்றும் வீடியோவை எடுக்கிறேன். இன்ஸ்டாகிராமில் கம்யூனிட்டி கைட்லைன்ஸ் இருக்கிறது. அதில், செக்ஸியாக போட்டோவை பதிவு செய்தால் இன்ஸ்டாகிராமை முடக்கிவிடுவார்கள்.

காசுக்காகத்தான் : என் வீடியோவை பார்த்த பலரும் குழந்தைகள் இதையெல்லாம் பார்க்கிறார்கள். இப்படி செய்யலாமா என கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு முதலில் எதற்கு இன்ஸ்டாகிராம். வளர்ந்தவர்கள் பயன்படுத்துவது தான் இன்ஸ்டாகிராம், அதில் ஆபாச வீடியோ, வயலன்ஸ் வீடியோ என பல வரும் அப்படி இருக்கும் போது எதற்கான குழந்தைகள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராமின் மூலம் எந்தவிதமான அறிவும் வளர்ந்துவிடாது. குழந்தைகள் படிக்க வேண்டும் என்றால் அதற்கான பல ஆஃப்கள் இருக்கின்றன. அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். என்னை பொறுத்தவரை குழந்தைகளிடம் போனை கையில் கொடுப்பது பெற்றோரின் தவறு. அப்படி இல்லை என்றால், இன்ஸ்டாகிராமிற்கு மெயில் போட்டு இந்த இன்ஸ்டாகிராமை தடை செய்ய சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு, நான் என்ன உடை போட வேண்டும், நான் எப்படி போட்டோவை போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? பணத்திற்காகவும் பிரபலமாவதற்காகவும் தான் கவர்ச்சியான உடைகளை அறிந்து போட்டோக்களை பதிவு செய்கிறேன். எந்த மாதிரியான ஆடையை உடுத்த வேண்டும் எப்படி போட்டோக்களை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதில் மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை.

More from Filmibeat

Read more about: bigg boss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X