Bigg Boss: அரோராவின் காதலன் பாவம்..அசிங்கமா நடந்துக்குறா.. எல்லாரும் காரி துப்புறாங்க.. ரியா பேட்டி!

சென்னை: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பிக் பாஸ் சீசன் 9 குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் எப்படி பார்ப்பார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதை நேற்று விஜய் சேதுபதியே மறைமுகமாக கண்டித்து இதை குழந்தைகள் எப்படி பார்ப்பார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பாக அரோரா, துஷாரா இருவரும் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது என்ன விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அரோராவின் தோழியும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ரியா பேட்டி அளித்துள்ளார்.

Bigg Boss season 9 Aurora sinclair Riya
Photo Credit:

IndiaGlitz Tamil youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், அரோரோ எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய செய்கையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் அருவருப்பாக தான் இருக்கிறது. அரோரா மிகவும் போல்டான பெண், அவள் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறாள். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் எதற்காக துஷாரா, கம்ருதீன் இருவருடன் சுற்றி தெரிகிறாள் என்றே தெரியவில்லை. வெளியில் அரோராவிற்கு காதலன் இருக்கும் போது, பிக்பாஸ் வீட்டில் துரோரா, கம்ருதீன் உடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை அவருடைய காதலர் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார். இதைப்பற்றி எல்லாம் அரோரா கவலைப்படாமல் தன் இஷ்டத்திற்கு வீட்டில் இருக்கிறாள்.

பிக் பாஸ் அரோரா: அரோரா பிக் பாஸ் வீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா.. இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. சோசியல் மீடியாவில் காரி துப்பிய பிறகும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தான் நினைத்ததை செய்து வந்த, கம்ருதீன் பேசவில்லை என்பதற்காக அழுதை எல்லாம் பார்க்கும்போது என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அரோராவிற்கு பணம் தான் முக்கியம், அவள் பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்வாள், அவருக்கு பெற்றோர்,உறவினர் என்று யாரும் இல்லை, அவள் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாள். இதனால், தன்னுடைய வாழ்க்கைக்காக அவர் பணத்தை சேர்த்து வைக்கிறாள். அவளுக்கு பணம் தான் முக்கியம். சோஷியல் மீடியாவில் அவளுக்கு ஒரு தவறான பெயர் இருக்கிறது. இந்த பெயரை மாற்றுவதற்காகத்தான் அந்த நிகழ்ச்சிக்கு போனால், ஆனால், இப்போது அவள் செய்வதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் வெளியில் வந்தவுடன் தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது என அவருடைய தோழி ரியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: riya ரியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X