திவாகரை வைத்து படமெடுப்பதற்கு பதிலாக நான் தற்கொ*லை செய்து கொள்வேன்.. பிக்பாஸ் பிரவீன் காந்தி

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த 5ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் ஆட்டம் போய் கொண்டு உள்ளது. முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இப்படி இருக்கும்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அனுபவம் குறித்து புரோவோக் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது, இந்த இளைய தலைமுறையினருக்கு எனது அனுபவத்தை பகிர இது ஒரு வாய்ப்பு என்று கூறினார். பலரும் முதல் வாரத்தில் எலிமினேட் இருக்காது என்று பலரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். ஒரு வார அனுபவமும் மிகவும் சிறப்பானதாக இருந்ததாக எலிமினேட் ஆகி வெளியே வந்ததும் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தார்.

Bigg Boss Tamil 9 Praveen Gandhi Controversy Comment About Watermelon Star Diwakar Goes Trending

பிரவீன் காந்தி: இப்படி இருக்கும்போது தனது பிக் பாஸ் அனுபவம் குறித்து அவர் அளித்த பேட்டியில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் குறித்து பேசியது பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் உள்ளது. அதாவது நடிப்பு அரக்கன் என்று கூறப்படுகிற, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை வைத்து நீங்கள் எப்போது படம் எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு, " அப்படி ஒரு நிலைமை வந்தால் நான் தற்கொ*லை செய்து கொள்வேன் என்று கூற, உடனே நெறியாளர், ஏன் சார் அவரை பலரும் நடிப்பு அரக்கன் என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார்.

அரக்கன் வேண்டாம்: உடனே, அரக்கன் எல்லாம் வேண்டவே வேண்டாம். நான் பல கிறுக்கன்களை பார்த்துள்ளேன். அரக்கன் வேண்டாம் எனக்கு முழுக் கண் தான் வேண்டும். அதாவது அவரை சினிமாவில் அரக்கன் என்கிறீர்கள். ஆனால் அவர் சினிமாவில் அரை கண். திவாகர் அடிப்படையில் பாராட்டை எதிர்பார்க்கிறார், இல்லை என்றால் நடித்துக் காட்டுவேன் என்கிறார். சிவாஜியை தூக்கி சாப்பிடுவேன் என்கிறார். இதையெல்லாம் உங்க தாத்தா கேட்டால் திவாகரை தூக்கி போட்டு மிதித்துவிடுவார்கள்" என்று கூறியுள்ளார்.

Bigg Boss Tamil 9 Praveen Gandhi Controversy Comment About Watermelon Star Diwakar Goes Trending

ரசிகர்கள் கமெண்ட்: இவர் இவ்வாறு கூறியுள்ளதை ரசிகர்கள் பலரும் மக்கள் மனதில் உள்ளதை அப்படியே இயக்குநர் பிரவீன் காந்தி கூறிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில், தனது புகழை பாடிக் கொண்டு இருந்தார் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். அதாவது, இயக்குநர் பிரவீன் காந்தியிடம் கூறிக் கொண்டு இருந்தார். உடனே இயக்குநரோ, குட் குட் குட் என்று கூறிவிட்டு திவாகரைத் தவிர்த்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X