பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கர்மா.. அது உன்னை சும்மாவிடாது.. என்னையே தூக்கி போட்டாங்க.. பிரவீன் காந்தி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த ஷோவில் இருந்து நந்தினி திடீரென வெளியேறிவிட்டதால், முதல் வார எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக குறைந்த வாக்குகளை பெற்ற இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற அட்டசாமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் பிரவீன் காந்தி. அதுமட்டுமில்லாமல் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தாலே, அதில் பல விஷயத்தை பேசும் இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் போன வேகத்தில் ஏன் திரும்பிவந்தார் என தெரியவில்லை.

இந்நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தி, Vijay Television யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,பிக் பாஸ் நிகழ்ச்சி இளைஞர்களை சரியாக வழி நடத்துகிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை கர்மா கண்காணிக்கிறது. இதுதான் கர்மா உன்னை சும்மா விடாது என்று சொல்வார்கள். அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நம்மை கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. பிக் பாஸில் நம்மை கேமிராக்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது, எந்த தவறு செய்தாலும் தப்ப முடியாது. அதுப்போலத்தான் இறைவன் நம்மை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார், நாம் அவருக்கு பயந்து நடந்து கொள்ள வேண்டும்.

Bigg Boss tamil Pravin Gandhi Interview 9
Photo Credit:

இயக்குநர் பிரவீன் காந்தி: நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று என்டர்டைன்மென்ட் செய்து, சில அறிவுரைகளை இன்றைய தலைமுறையினருக்கு கூறலாம் என நினைத்திருந்தேன். ஆனால், பலரும் பிஸ் பாஸ் நிகழ்ச்சியை என்டர்டைன்மென்டாகத்தான் பார்க்கிறார்கள் என்னுடைய அறிவுரையை அவர்களுக்கு தேவையில்லை. இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் இருந்திருந்தால், பிரவீன் காந்தி என்ன சொல்கிறார் என்பது புரிந்து கொண்டு இருப்பார்கள். நான் சொன்ன அறிவுரைகளை அங்கிருந்த அனைத்து பெண்களும் ஏற்றுக்கொண்டார்கள், ஆனால், யாரும் அதை செயல்படுத்தவில்லை. அதற்கான சூழ்நிலை அந்த வீட்டில் இல்லை, மக்கள் என்னை வெளியே அனுப்பினார்கள் என்று சொல்ல முடியாது. இந்த இடத்திற்கு இவன் சரியானவன் இல்லை என இயற்கை முடிவு செயது என்னை வெளியில் அனுப்பி இருக்கிறது.

எல்லாமே சீன் தான்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் யாரையும் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தால் எலிமினேட் ஆகாமல் இருக்கலாம் அப்படி கேள்வி கேட்பவர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இடமே இல்லை. அதே போல ஒரு வாரத்தில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது, தொடர்ந்து அவர்களுடன் பயணம் செய்யும் போது தான் அவர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியும். நான் வீட்டை விட்டு வெளியில் வரும் போது அனைவரும் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அது சீன் தானே, அதைத் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். யாராவது ஒருவர், வாராவாரம் வெளியில் போனால் தான், மற்றவர்கள் ஜெயிக்க முடியும் அப்படி இருக்கும் போது எதற்கு சீன் போட வேண்டும். அவர்கள் மனதிற்குள் உண்மையில் என்ன நினைத்து இருப்பார்கள், யப்பா வெளியில் பிரவீன்காந்தி வெளியில் போய்விட்டார், என சந்தோஷப்பட்டு இருப்பார்கள் என்று பிரவீன் காந்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X