மார்பை புடிச்சி.. சொல்லவே அசிங்கமா இருக்கு.. மேடையில் பட்ட வேதனையை சொன்ன பிக் பாஸ் ரம்யா ஜோ?
சென்னை: ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞரான ரம்யா ஜோ தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள ரம்யா ஜோ, கடந்த ஆண்டு நடிகை ஷகிலாவிற்கு அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரம்யா ஜோவின் உண்மையான பெயர் ஸ்டெல்லா, பெற்றோர் கைவிட்டு, விவாகரத்துத் செய்து கொண்டு பிரிந்ததால், 2 வயதிலேயே இரு சகோதரிகளுடன் ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பணத்திற்காக ஆடல், பாடல் நடன நிகழ்ச்சியில் கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் என்னுடைய அம்மா, மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அப்பாவை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்பாவும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், யாருடைய ஆதரவும் இல்லாமல் கஷ்டப்பட்டு ஆசிரமத்தில் வளர்ந்தோம்.

ரம்யா ஜோ: நான் ஒருவரை காதலித்தேன், அவர் தான் கவர்ச்சி நடனத்தில் ஆடினால், நிறைய பணம் கிடைக்கும் என்றார். அப்படி ஆடுவதற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருந்தாலும் காதலருக்காக ஆடத்தொடங்கினேன். படிப்பும் இல்லாததால் வாழ்க்கையை நடத்தவே முடியல, இதனால், வேறு வழியே இல்லாம தான் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடுவதே என் தொழிலாகி விட்டது. அப்படி நடனமாடும் போது மார்பை தொடுவார்கள், உரசுவார்கள், தகாத வார்த்தையால் பேசுவார்கள், அசிங்கமாக செய்கை செய்து அவமானப்படுத்துவார்கள் இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். ஏனென்றால், என்னுடைய அக்காவிற்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள், அவளை நன்றாக வளர்க்க வேண்டும், நாங்கள் பட்ட எந்த கஷ்டத்தையும் அவள் படக்கூடாது என்பதற்காக பல விஷயங்களை சகித்துக் கொண்டேன்.
அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாங்க: சினிமாவில் நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டேன், இதற்காக கன்னட சினிமாவில் இருந்து ஒருவர் எனக்கு நடிகையாக வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால், அதற்கு சில அட்ஜஸ்மென்ட்களை செய்ய வேண்டும் என்றார். அதாவது, நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என ஐந்து பேருடன் படுக்கையை பகிர வேண்டும் அப்படி செய்தால், உனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். நான் அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என நிராகரித்து விட்டேன். வாழ்க்கையில அன்பு கிடைக்கவில்லை, பேசும் அனைவருமே போலியா இருக்காங்க, அவர்கள் அனைவரும் பணத்த தான் எதிர்பார்க்கிறார்கள். எனக்கும் ஒரு மனசு இருக்கு என்று யாருமே நினைக்கவில்லை.
கண்கலங்கிய ரம்யா ஜோ: இதற்கு மேல திருமணம் வாழ்க்கை பற்றி எனக்கு ஆசையே இல்ல, இருக்கும் வரைக்கும் என்னுடைய அக்கா மகளுக்காக என்னால முடிஞ்சதா செய்யணும், சொந்த வீடு வாங்கி என்னுடைய அக்காவிடன் அந்த வீட்டில சந்தோஷமா இருக்கணும் என்பது மட்டும் தான் என்னுடைய ஆசை என அந்த பேட்டியில் ரம்யா ஜோ கண்கலங்கி பேசி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி தற்போது, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த ரம்யா ஜோ நிச்சயம் வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது


Click it and Unblock the Notifications











