Karur: சாக்கடை குழி.. திடீர் பவர் கட்.. கரூர் சம்பவத்தில் சந்தேகத்தை கிளப்பிய பிஸ்மி!

கரூர் சம்பவத்தில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து வலையுலகப் பத்திரிகையாளர் பிஸ்மி மனம் திறக்கிறார். விஜய், காவல்துறை மற்றும் ஊடகங்களின் அலட்சியத்தை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். பாதுகாப்பு குறைபாடுகள், நிர்வாகத் தவறுகள், ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த துயர நிகழ்வுக்கு நீதி கோருகிறார்.

சென்னை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஈரக்கொலையே பிசையும் மனநிலையில் இருப்பதாக வலைப்பேச்சு பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூப் தளத்தில் பேசி உள்ளார். பணம், காசு, பெயர், புகழ் எல்லாத்தையும் விட உயிர் மிகவும் பெரியது. இதுபோன்ற சம்பவம் எங்குமே நடக்கக்கூடாது, இதில் யார் குற்றவாளி என்று தேடுவதைவிட, இது போன்ற விஷயத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என்றார்.

விஜய் முன்பு இருந்தே, கூட்டத்திற்கு பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வராதீர்கள் என்று தான் சொல்லி இருக்கிறார். பொதுவாக பிரச்சாரக் கூட்டத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், விஜய் அவர்கள் வரவேண்டாம், தொலைக்காட்சிகளில் இதை நேரலை செய்வார்கள் அதை பாருங்கள் என பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். ஆனால், அவ்வளவு சொல்லியும் பல முதியோர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் வந்திருந்தார்கள். கூட்டத்தில் கை குழந்தையை வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவர் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக வந்தேன் என்று கூறியிருந்தார். இது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு. அதனுடைய விளைவு தான் இப்படி ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

Vijay Karur Bismi
Photo Credit:

வலைப்பேச்சு பிஸ்மி: விஜய்க்கு கூட்டம் கூடுவது தெரிந்தும் கூட, சிறிய இடத்தில் அனுமதி அளித்துள்ளார்கள். அரசியல் காரணங்களுக்காக அனுமதி கொடுத்தது மிகப்பெரிய தவறு. தவெகவினர் வேறு ஒரு இடத்திற்கு அனுமதி கேட்கிறார்கள், அந்த இடத்திற்கு அனுமதி மறுத்துவிட்டு இந்த இடத்திற்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தவெக்காவினரே இந்த இடத்தை கேட்டு இருந்தாலும், அது குறுகலான இடம் அனுமதி தரமுடியாது என்று தான் காவல்துறையினர் மறுத்து இருக்க வேண்டும். சம்பவ நடந்த இடத்தில் பலர் சாக்கடை குழியில் விழுந்து உயிரிழந்து இருக்கிறார்கள். விஜய் வரும் இடத்தில் கூட்டம் கூடும் என தெரிந்தம், ஆபத்தான சாக்கடை குழியை மூட வேண்டும் என்கிற அறிவு இல்லையா?

வேதனை அடைந்தேன்: ஊடகவியலாளர்களும் இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு வகையில் காரணம், விஜய்யின் கொள்கை என் என்று தெரிந்த கொள்வதற்காக கூடிய கூட்டம் இல்லை. நடிகருக்காக கூடிய கூட்டம். சினிமா நடிகர்கள் குறித்த பிம்பத்தை ஊதிப் பெருதாக்கியது ஊடகங்கள் தான். சினிமா செய்திகளை மட்டும் ஊடகங்கள் பேச வேண்டும், சினிமாக்காரர்களைப் பற்றி அல்ல, மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நடிகரைப் பார்க்க வெறித்தனமாக முயல்வது பயங்கரமானது. இந்த செய்தியை பார்த்து ஊடகவியாளர் என்கிற முறையில் தனிப்பட்ட முறையில் நான் வேதனை அடைந்தேன். எதிர்காலத்தில் நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

விஜய் மாற்ற வேண்டும்: அதேபோல, பல ஊடகங்கள் விஜய் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார், அவர் வாகனம் அந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது தேவையில்லாத ஒன்று, அவர் எந்த இடத்தில் பேசுகிறாரோ அதை நேரலையில் ஒளிபரப்பினாலே போதும். அதேபோல, விஜய் காலை 8:30 மணிக்கு கிளம்பினால், அவர் எப்போது கரூர் வருவார் என நிர்வாகிகளுக்குத் தெரிய வேண்டும். முன்கூட்டியே நேரத்தை அறிவித்து, மக்களை கட்டுப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல், பிரச்சார வேன் தேவை இல்லை, அது கூட்ட நெரிசலை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகாவது விஜய் தனது பிரச்சார பாணியை மாற்ற வேண்டும். உயிருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், முதல்வர் நாற்காலியை விட ஒரு சாமானியனின் உயிர் முக்கியமானது என்பதை விஜய் உணர வேண்டும்.

பல சந்தேகம்: 30,000 பேர் கூடிய இடத்தில் 30 போலீஸை வைத்து பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்திற்கு காவல்துறை அலட்சியம் முக்கிய காரணம். அதே போல, விஜய் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது. தவெக தொண்டர்கள் மத்தியில் எப்படி செருப்பு வீச முடியும்? வேறு யாரேனும் திட்டமிட்டு இதை செய்தார்களா? உயிரிழப்புகளுக்கும் இதற்கும் தொடர்புண்டா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது தற்செயலான விபத்து இல்லை என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதனால், விஜய் நீதிமன்றத்தை நாடியது உள்ளார். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் மூலம் உண்மை வெளிவர வேண்டும் பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X