லோகேஷை ரஜினி கழட்டிவிட காரணம் இதுதான்.. கமலிடம் உண்மையை மறைத்த ரஜினி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த், லோகேஷை கழட்டிவிட்ட முக்கிய காரணமே இது தான் என வலைபேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், இதுகுறித்து பேசி வலைப்பேச்சு பிஸ்மி, லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் தனது படத்தின் ஒன்லைன் கதையை கூறியிருக்கிறார். இதைக்கேட்ட ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாமல் ஓகே என்ன சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து தான், லோகேஷ் ரஜினிக்கு இந்த கதைபிடித்து இருக்கிறது. நாம் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறோம் என நினைத்திருந்தார். ஆனால், ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் சொன்னா கதையில் விருப்பம் இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால், கூலி திரைப்படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை இருந்தது என்று வந்த விமர்சனம் ரஜினியின் காதுக்கு சென்று உள்ளது. லோகேஷ் சொன்ன கதையும் அக்ஷன் கதையாக இருந்துள்ளது.

Rajinikanth kamal haasan bismi
Photo Credit:

ரஜினி எடுத்த முடிவு: ரத்தமும், சதையும் கலந்த ஆக்சன் திரைப்படத்திலேயே ரஜினி தொடர்ந்து நடித்துக் வருவதால், அடுத்து, லைட்டான ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என ரஜினி நினைத்து இருக்கிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை பெண்டிங்கில் வைத்துவிட்டு, நெல்சனிடம் கதையை கேட்டு இருக்கிறார். அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால், நெல்சன் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். நெல்சன் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துவிட்டார். ஆனால், இந்த விஷயத்தை லோகேஷிடமோ, கமலிடமும் சொல்லவில்லை. ரஜினிக்கு தன்னுடைய கதை பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட லோகேஷ், அடுத்ததாக கைதி 2 திரைப்படத்தை எடுக்கலாம் என்ற முடிவிற்கு வந்து தற்போது கைதி 2 திரைப்படத்தை எடுப்பதற்கான வேலையில் இறங்கி விட்டார்.

கைதி 2 : இந்த திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ரஜினி எடுப்பதுதான் முடிவு. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது கமலுக்கு வருத்தமாக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இல்லை என்றால், இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கமல் சொல்ல மாட்டார். விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ் தான். விக்ரம் படத்தை தொடர்ந்து 'விக்ரம் ரிட்டன்ஸ்' என்று ஒரு படம் வராக இருக்கிறது அந்த படத்தில் கமலும் விக்ரமும் மீண்டும் இணைவார்கள். இதுனால் வரைக்கும் இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் வரை நடக்க இருக்கிறது. அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான், கைதி 2 திரைப்படத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறார். அதேபோல, நடிகர் கார்த்திக்கும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களை முடித்துவிட்டு இருவரும் கைதி 2 திரைப்படத்தின் வேலைகளை தொடங்குவார்கள் என பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X