For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Exclusive: ஆன்டி இன்டியன் படத்துக்கு ஏன் தடை.. சென்சார் போர்டு யாருக்காக.. தயாரிப்பாளர் ஆவேசம் !

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் ப்ளூ சட்டைமாறனை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து விடுவார்.

  அரசியல்வாதிகளை காப்பாற்ற துடிக்கும் censor board | Producer Adham Bava Chat p-01 | Filmibeat Tamil

  இப்பபடி பல திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இதில் பலரது விமர்சனங்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒரு சில விமர்சனங்கள் திரைத்துறை பிரபலங்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

  ப்ளூசட்டை மாறனின் நையாண்டியான பேச்சால் கடுப்பானவர்கள் நீங்கள் ஒரு படம் எடுங்க என்று சவால் விடுத்திருந்தனர். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மாறன், ஆன்டி இந்தியன் என்று பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார். தணிக்கை குழுவுக்கு சென்ற இத்திரைப்படத்திற்கு தணிக்கைகுழு தடைவிதித்துள்ளது.

  Blue Sattai Maran directing Anti Indian movie producer Adham Bava special interview

  இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவிடம் மேற்கொண்ட நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

  கேள்வி : ஆன்டி இண்டியன் என்று பெயர் வைக்க என்ன காரணம்?

  பதில் : இந்த படத்திற்கு இதைவிட பொறுத்தமான பெயர் இருக்காது, ஏன்னா இந்த படம் முழுக்க, அந்த மாதிரி கதாபாத்திரங்கள் வராங்க. அதாவது மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், தன் சுயலாபத்திற்காக அரசியலை சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர்களை குறிக்கும் வகையில் ஆன்டி இண்டியனு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  Blue Sattai Maran directing Anti Indian movie producer Adham Bava special interview

  கேள்வி : தமிழ் சினிமாவே ப்ளூ சட்டை மாறனை பார்த்து பயப்படும் போது நீங்க எப்படி கதை கேட்டீர்கள்?

  பதில் : என்னுடைய நண்பர் சுரேஷ் காமாட்சியும், நானும் தான் இந்த கதையை கேட்டோம், மாறன் அவர்கள் எப்படி ஒரு பாடத்தை ரீவ்யூ பண்ணுவாரோ அதேப்போல அழகாக கதையை சொன்னார். சிலருக்கு படம் எடுக்க தெரியும் கதை சொல்ல தெரியாது, சிலருக்கு கதை சொல்ல தெரியும் படம் எடுக்க தெரியாது ஆனால், இவர் இரண்டையும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

  கேள்வி : இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி வருவதாக சொல்லப்படுதே?

  பதில் : இந்த திரைப்படத்தில் கபாலினு ஒரு கதாபாத்திரம் பற்றி பெயர் வருது அவ்வளவுதான், அதற்காக அது ரஜினிதான்னு சொல்லிட முடியாது. அண்ணாமலை, பாட்ஷா, படையப்பானு பல படங்களில் நடிச்சிருக்காரு ரஜினி .அதுக்காக எந்த படங்களிலும் இந்த பெயரை வைக்கவே கூடாதா. கபாலி என்ற பெயரை படங்களில் பயன்படுத்தக்கூடாதானு சென்சார் போர்டுல எதாவது சட்டம் வைத்து இருக்கானு தெரியல. சென்சார்போர்டு இந்த பெயருக்கு மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டுதுனு தெரியல.

  Blue Sattai Maran directing Anti Indian movie producer Adham Bava special interview

  கேள்வி : பிஜேபி தலைவர் ஒருவரின் பெயர், இப்படத்தில் இடம் பெற்று இருப்பதாகவும், சொல்லப்படுகிறது அந்த தலைவர் யார்?

  பதில் : கோர்ட்டாவது டேஷ் ஆவதுனு சொன்ன தலைவர்... எச்.ராஜா.. அப்படினு நாங்க சொல்லல அவங்க நினைச்சிக்கிட்டாங்க அவருனு... அதனால ராஜானு பெயர் வர அனைத்து இடத்திலையும் மியூட் பண்ணனும், சில காட்சிகளை தூக்கனும்னு சொன்னாங்க. நீங்க பிஜேபித் தலைவர் ராஜாவைத்தான் சொல்றீங்கனு சொல்றாங்க. இது ஒரு கற்பனை கதை, கதையை கதையா பாருங்க..சென்சார் போர்டுக்கு யார் அழுத்தம் கொடுக்குறா.. அரசியல்வாதிகளை காப்பற்ற சென்சார் போர்டு ஏன் துடிக்கிது.. சென்சார்போர்டு வேலை எனன அதைத்தானே செய்யனும், பெயரை மாற்ற சொல்றது, காட்சியை மாற்ற சொல்வதற்கு அதிகாரம் இருக்கா.. பேசாமா அவங்களே படம் எடுக்கட்டுமே எதுக்கு நாங்க.

  Blue Sattai Maran directing Anti Indian movie producer Adham Bava special interview

  கேள்வி : இந்த படத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதுனு நீங்க நினைக்கிறீங்களா?

  பதில் : நிச்சயமா இருக்கு, இவர் பல படங்களை விமர்சனம் செய்து இருக்கிறார். இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு இவர் எதிரியாகவே இருக்கிறார். இதனால், ஆன்டி இன்டியன் படத்திற்கு தடை வந்ததும் பல தயாரிப்பாளர்கள் கொண்டாடினார்கள். சக தயாரிப்பாளரின் பணம் நஷ்டம் அடைவதில் உங்களுக்கு என்ன சந்தோஷம். மாறன் ஒரு படத்த விமர்சிக்கிறார். இவர் படம் நல்லா இல்லைனா நீங்களும் விமர்சனம் செய்யுங்க, நாங்க ஏத்துகிறோம். அதவிட்டுவிட்டு படம் வெளிவரக்கூடாதுனு சொன்னா எப்படி. மேலும், இப்படத்திற்கு ஒன்றிய அரசின் தலையிடு இருப்பதாக நாங்க சந்தேகப்படுகிறோம் என்று கூறினார். மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகள் அடுத்த பகுதியில்...

  English summary
  Blue Sattai Maran directing Anti Indian movie producer Adham Bava special interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X