»   »  மரத்தைச் சுற்றி டூயட் பாடாத.. யதார்த்தமான ரஜினியை கபாலியில் பார்க்கலாம்: ஜான் விஜய்

மரத்தைச் சுற்றி டூயட் பாடாத.. யதார்த்தமான ரஜினியை கபாலியில் பார்க்கலாம்: ஜான் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போன்று யதார்த்தமாக கபாலியில் நடித்திருப்பதாக அப்படத்தில் நடித்துள்ள ஜான் விஜய் தெரிவித்துள்ளார்.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது. கபாலி ரிலீசையொட்டி தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பது போன்று, எங்கெங்கு காணினும் ரஜினி புகழாகவே உள்ளது.

இந்நிலையில், கபாலி படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ரஜினியுடன் சேர்ந்து இருக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜான் விஜய்.

அவர் தனது கபாலி பட அனுபவங்களை ஒன் இந்தியா வாசகர்களுக்கென பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ, அந்த பேட்டி உங்களுக்காக...

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

பொதுவாகவே என் படங்கள் குறித்த பயங்கரமான எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. காரணம் அதில் நான் நடித்திருப்பதால். ஆனால், இந்தப் படத்திற்கு உலக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் சூப்பர்ஸ்டாருடன் நான் நடித்துள்ளேன்.

முதல் ஷோ...

முதல் ஷோ...

தளபதி படம் முதலே ரஜினியின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எனவே, இந்த முறையும் அதனை தவற விட மாட்டேன்.

ரஜினியின் அட்வைஸ்...

ரஜினியின் அட்வைஸ்...

ரஜினியைப் பற்றிச் சொல்வதென்றால் அவர் மிகச் சிறந்த மனிதர், ஹம்பிள், சிம்பிள். அவர் எனக்கு கூறிய அறிவுரை என்னை நானாக இருக்கச் சொன்னது தான்.

ஆக்‌ஷன் காட்சிகள்...

ஆக்‌ஷன் காட்சிகள்...

இப்படத்தில் என்னுடன் கிஷோர், கலையரசன், ரித்விகா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைவரும் தங்களது பாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளனர். தன்ஷிகா ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

குடும்பத்தோடு பார்க்கலாம்...

குடும்பத்தோடு பார்க்கலாம்...

கபாலி மிகவும் யதார்த்தமான படம். நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து பொழுதுபோக்கும் படமாக இருக்கும்.

யதார்த்தமான ரஜினி...

யதார்த்தமான ரஜினி...

ரஜினியின் மற்ற படங்களைப் போல், அவர் நாயகிகளுடன் மரத்தைச் சுற்றி டூயட் ஆடும் பாடல்கள் இப்படத்தில் இருக்காது. யதார்த்தமான, நிஜவாழ்க்கையில் உள்ள ரஜினியின் கேரக்டரைப் படத்தில் பார்க்கலாம். அவர் வயதுக்கேத்த கதாபாத்திரம் இப்படத்தில் அவருக்கு அமைந்துள்ளது.

கபாலி அவதாரம்...

நிச்சயம் ரஜினியின் மற்ற படங்களில் இருந்து கபாலி வேறுபட்டு இருக்கும். புதிய அவதாரமாக, ரஞ்சித்தின் அவதாரமாக இப்படம் இருக்கும். இதுதவிர ரஜினியின் நடிப்பைப் பற்றிக் கூற எனக்கு வயதும் பத்தாது, அனுபவமும் போதாது' என இவ்வாறு ஜான் விஜய் தெரிவித்துள்ளார்.

English summary
Actor John Vijay who plays a important role in Kabali has said that the fans can see real life Rajini in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil