For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!

  |

  சென்னை: நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் ஓப்பன் டாக் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

  GENDER FLUIDITY னா என்னனு தெரியுமா ? | OPEN TALK WITH REGINA CASSANDRA -P-01|FILMIBEAT TAMIL

  நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படத்தில் டெக்னாலஜி வில்லியாக நடித்து மிரட்டி உள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

  பாலிவுட் படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்தது ஏன் என்பது தொடர்பாகவும் இந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

  டாம் பாய்

  டாம் பாய்

  சிறுவயது முதலே டாம் பாய் போலவே தான் வளர்ந்து வந்தேன். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பது தான் எனக்கு பிடித்த ஒன்று என்று கூறியுள்ளார்.

  சக்ரா வில்லி

  சக்ரா வில்லி

  நடிகர் விஷாலின் சக்ரா படத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள ரெஜினா கசாண்ட்ராவை பலரும் பாராட்டி வரும் நிலையில், சின்ன வயதில் நீங்கள் ஏதாவது திருடிய அனுபவங்கள் உண்டா என்கிற கேள்விக்கு, கொஞ்சம் கூட மறைக்காமல் பதில் அளித்தார்.

  திருட்டுத்தனம்

  திருட்டுத்தனம்

  ஒரு முறை சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளை எடுக்க நண்பர்கள் பிளான் போட்டார்கள். ஆனால், எனக்கு அது போன்ற விஷயங்களில் விருப்பம் இல்லை என்றார். பாய் பிரெண்டுடன் ரகசியமாக பேச பெற்றோரின் மொபைலை திருட்டுத் தனமாக எடுத்த குட்டி ஸ்டோரியையும் பகிர்ந்துள்ளார்.

  ஜென்டர் ஃப்ளூடிட்டி

  ஜென்டர் ஃப்ளூடிட்டி

  பாலிவுட்டில் நடிகை சோனம் கபூருடன் லெஸ்பியனாக நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆண், பெண் பேதம் எல்லாம் இந்த தலைமுறைக்கு இல்லைங்க, இப்போ இருக்கிற சின்ன பசங்க genre fluidity பத்திலாம் பேசுறாங்க, ஆணாக பிறந்ததாலே என்னை ஆண் என்று சொல்லாதீங்க நான் அப்படி இல்லை என்று பெற்றோர்களுக்கு புரிய வைக்கும் இடத்துக்கு அடுத்த தலைமுறையினரிடம் பாலினம் குறித்த புரிதல் உள்ளது என்றும் ஏகப்பட்ட தகவல்களை அடுக்கியுள்ளார்.

  உண்மையான காதல்

  உண்மையான காதல்

  லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தனக்கு பலரும் கடிதங்கள் எழுதி பாராட்டினார்கள் என்றும், அவர்கள் மத்தியில் இருப்பது உண்மையான காதல் மட்டுமே.. காதலுக்கு ஆண் பெண் பேதம் இல்லை என்றும் கூறியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

  நெஞ்சம் மறப்பதில்லை

  சக்ரா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி நீண்ட காலங்களாக கிடப்பில் கிடக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வரும் மார்ச் 5ம் தேதி வருகிறது. அந்த படத்தில் நடித்த அனுபவங்களையும் நடிகர் அருண் விஜய்யுடன் ஏவி31 படத்தில் நடித்த அனுபவங்களையும் பெண்களின் கண்கள் மட்டுமல்ல ஆண்களின் கண்களும் கவர்ச்சியானது தான் என ரெஜினா பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

  English summary
  Chakra Actress Regina Cassandra latest interview reveals more about her and her tom boy character. She casually talks about lesbian issue and gender fluidity matters in this interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X