»   »  காமெடியன்களை மதிப்பதே இல்லை - சார்லி வருத்தம்

காமெடியன்களை மதிப்பதே இல்லை - சார்லி வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Charlie
முன்பு போல காமெடி நடிகர்களுக்கு இப்போது மரியாதையும், மதிப்பும் இல்லாமல் போய் விட்டது என்று நகைச்சுவை நடிகர் சார்லி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சார்லி. ஹீரோக்களின் நண்பனாக, கல்லூரி மாணவனாக என பலவிதமான வேடங்களில் நடித்துள்ள சார்லி இப்போது முன்பு போல அதிகப் படங்களில் நடிப்பதில்லை.

இந்த நிலையில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்லூரி பட நாயகி தமன்னா நடிக்கும் ஆனந்த தாண்டவம் படத்தில் சார்லி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கிறது.

படப்பிடிப்புக்காக வந்த சார்லி, படப்பிடிப்பின் இடைவேளையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தப் படத்தில் மார்க்கர் எனற ரோலில் நடிக்கிறேன். கோவில்பட்டியில் தான் எனது பள்ளி, கல்லூரி நாட்கள் ஓடியது.

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு (1937-67) என்பது குறித்து ஆய்வு செய்து எம்.ஃபில் ஆய்வுப் பட்டத்தை முடித்தேன்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னை அரசு செய்தி ஒலிபரப்புத் துறையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன். பின்னர் நடிகராகி இதுவரை 527 படங்களில் நடித்துவிட்டேன்.

அந்த காலத்தில் நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்த ஒரு திருமண விழாவில் 10 வயது சிறுமி ஒருவர் டான்ஸ் ஆடினார்.

அபிநயத்துடன் அவர் நன்றாக நடனமாடியதை பார்த்த அந்த சிறுமியின் முகவரியை வாங்கிக் கொண்டு 10 வருடங்கள் கழித்து அதே சிறுமியை தான் தயாரித்த மணமகள் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

அவர் வேறு எவருமில்லை. நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் தான். அந்தளவுக்கு நகைச்சுவை நடிகர்களுக்கு செல்வாக்கும், உரிய மரியாதையும் சமூகத்தில் இருந்தது. ஆனால் தற்போது நகைச்சுவை நடிகர்களுக்கு போதிய மரியாதை இல்லை என்றார் சார்லி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil