»   »  வடிவேலுவுக்கு ஜோடியாக சாயாசிங்?

வடிவேலுவுக்கு ஜோடியாக சாயாசிங்?

Subscribe to Oneindia Tamil
விவேக்குடன் மட்டுமல்ல வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் அதை விட மாட்டேன், கண்டிப்பாகநடிப்பேன் என்று கூறி பயமுறுத்துகிறார் மன்மதராணி சாயா சிங்.

பெங்களூர் குட்டியான சாயா சிங், திருடா திருடி மூலம் பல லட்சம் தமிழ் உள்ளங்களைக் கவர்ந்தார். ஆனால் அந்தோ பரிதாபம்!அதற்குப் பிறகு அவர் ஆட்டம் எடுபடவில்லை.

மன்மதராசா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் இன்னும் யார் மனதிலிருந்தும் மறையவில்லை, ஆனாலும் அவர் முன்னேறாமல்போனது ஆச்சரியம்தான்.

அந்த ஆச்சரியம் நமக்கு மட்டுமல்ல, சாயாசிங்குக்கும் உள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டால், மன்மதராசா எனக்குப் பெரும்புகழைக் கொடுத்தது, அந்தப் புகழே எனது வளர்ச்சிக்கும் தடையாகிப் போனது.

அதை விட சூப்பர் ஹிட் பாட்டையும், ஆட்டத்தையும் என்னிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மன்மதராசாவைமிஞ்ச எந்தப் பாட்டாலும் முடியாது என்பதால் நான் கிளிக் ஆகாமல் போய் விட்டேன்.

இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தமிழில் எனக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பாட்டுக்கு ஆடுவதால் தப்பேதும் இல்லை. அதையும் நன்றாகச் செய்ய வேண்டும் அல்லவா? அந்த வகையில்தான்விக்ரமுடன் அருள், விஜய்யுடன் திருப்பாச்சி என ஒரு பாட்டுக்கு நடனமாடினேன்.

அந்தப் பாட்டுக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததை மறந்து விடக் கூடாது என்கிறார் சாயா.

அது சரி, ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருந்து விட்டு திடீரென காமெடியனுடன் (விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில்இவர்தான் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்) ஜோடி சேர்ந்து விட்டீர்களே என்று கேட்டால்,

அதில் என்ன தப்பு? விவேக்கும் ஒரு ஹீரோதான். அவரும் நல்ல நடிகர்தான். அவருடன் நடிப்பதில் உண்மையில் பெருமையாகஉணர்கிறேன்.

விவேக் மட்டுமல்ல, வடிவேலுவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.

ஒரு நடிகை என்றால் அவரது திறமை பலமுகங்களில் வெளிப்பட வேண்டும். எனவே எந்த நடிகருடனும் நடிக்க நான் தயார்தான்என்று கூறி அசத்துகிறார்.

நம்ம ஊர் ஹீரோக்கள் குறித்து சாயாசிங்கிடம் கசப்பாண எண்ணம் இருக்கிறது. ஏன் என்று கேட்டால், சில ஹீரோக்கள்சினிமாவையும் தாண்டி நிஜத்திலும் சேஷ்டைகள் செய்கிறார்கள். அது எனக்குப் பிடிப்பதில்லை. அப்படிப்பட்ட ஹீரோக்களைநான் வெறுக்கிறேன் என்கிறார் சாயா.

சாயாவுக்கு கிசுகிசுக்கள் குறித்துக் கவலையே இல்லையாம். கிசுகிசுக்களில் இதுவரை நான் சிக்கியதில்லை. அப்படியே என்னைப்பற்றிக் கிசுகிசுக்கள் வந்தாலும் எனக்குக் கவலையில்லை,

அவை என்னைப் பாதிப்பதில்லை. அவற்றை நான் பெரிதுபடுத்துவதும் இல்லை என்கிறார் கூலாக.

ரொம்பத்தான் தேறி விட்டார் சாயா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil