மாதம்பட்டி வாய் திறந்தால் என்னாகும்.. எந்த காலத்திலும் ஜாய் கிரிஸில்டா மனைவியாக முடியாது.. சேகுவேரா!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாதம்பட்டி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என பல குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருந்தார். இதுகுறித்து, பத்திரிக்கையாளர் சேகுவேரா Vaagai Tamil சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இந்த விஷயத்தியில் ஜாய் கிரிஸில்டா தான். மூச்சுக்கும் 300 தடவை என்னுடைய கணவர், என்னுடைய கணவர் என கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், ரங்கராஜன் இது குறித்து எதுவுமே பேசாமல் அமைதியாக ஜாலியாக குரோஷி வீடியோவிற்கு பதில் அளித்து கொண்டு இருக்கிறார். ஜாய் கிரிஸில்டா அளித்த அந்த பேட்டியில், ஸ்ருதி ப்ரியாவிடம் இருந்து நேரடியாக மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடம் வரவில்லை. அதற்கு முன்பே அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து இருக்கிறது என கூறியிருக்கிறார். மாதம்பட்டி இவ்வளவு மோசமானவர் என்று தெரிந்தும், ஏன் ஜாய் அவருடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயானார்.

நம்பிக்கை இல்லை: இதுவரையில் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா, தனது கணவர் குறித்து எந்த விதமான குற்றச்சாட்டையாவது கூறினாரா. தன்னுடைய குழந்தைகள் தான், உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவள் தான் உண்மையான பெண், இதற்காக பெண்கள் அனைவரும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என் கணவர் எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் மனநிலையில் இருக்கிறார் ஸ்ருதி பிரியா. அதேபோல மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் முதல் மனைவி ஸ்ருதி பிரியா மீது அசாத்தியமான நம்பிக்கை உள்ளது. அதனால் தான், ஆறு ஆண்டுகள் பிரிந்து இருந்தாலும், இப்போது மீண்டும் தனது மனைவி உடன் சேர்ந்து இருக்கிறார். ஆனால் ஜாய் கிரிஸில்டா விஷயத்தில் அவருக்கு அந்த நம்பிக்கை இல்லை.
சட்டப்படி செல்லாது: வீட்டு டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு இருக்கிறார், கோவிலில் திருமணம் செய்து கொண்டோம் என ஆதாரத்தை ஜாய் அவர்கள் காட்டுகிறார். இந்த ஆதாரம் எல்லாம் நீதிபதிமன்றத்தில் செல்லாது. ஜாய், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், மாதம்பட்டி இந்து மதத்தை சேர்ந்தவர் சட்டப்படி இந்த திருமணமே செல்லாது. வயிற்றில் குழந்தை இருக்கிறது, என்ற வாதத்தை ஜாய், முன் வைக்கிறார். குழந்தை பிறந்த பிறகுதான், டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பிறகுதான் சட்டம் இதில் என்ன நடந்திருக்கிறது என்று ஒரு முடிவு எடுக்கும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால், மாதம்பட்டி பொறுப்பாகி விடுவார். ஆனால், எந்த காலத்திலும் ஜாய் கிரிஸில்டா மனைவியாக முடியாது, இழப்பீடு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்.
மாதம்பட்டி வாய் திறந்தால் என்னாகும்: ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல புகார்களை கூறுவது சரியில்லை. மாதம் பட்டி ரங்கராஜ், இந்த விஷயத்தில் இதுவரை கருத்துக்களை எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். அவர் வாயை திறந்து ஜாய்க்கு எந்தெந்த நடிகர்களுடன் பழக்கம் இருந்தது, எந்த தயாரிப்பாளருடன் பழக்கம் இருந்தது என்று சொன்னால் என்ன ஆகும். ஜாய் கிரிஸில்டா குழந்தைக்கு இனிசியல் கொடுப்பதிலே அவருக்கு ஏதோ தயக்கம் இருப்பதால் தான் இந்த பிரச்சனை என சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











