மாரி செல்வராஜிக்கு இதுதான் வேலையா? பைசன் படத்தில் சொல்லப்படும் அரசியல் என்ன? பிரபலம் பேட்டி!
சென்னை: மாரி செல்வராஜி இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' திரைப்படம் 17ந் தேதி தியேட்டரில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பைசன் படம் குறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா BBT Cinema யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன் எனக்கு பிடித்தமான படமாக பைசன் திரைப்படம் இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் எனக்கு சில மாற்று கருத்துக்கள் இருந்தன. ஆனால், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அப்படி இல்லை அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என கதைக்க முடித்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதேபோல, பைசன் திரைப்படத்தை பரியேறும் பெருமாள் திரைப்படத்துடன் ஒப்பிட்டுத்தான் நான் பார்த்தேன். அந்த படத்தில் கிளைமாக்ஸ் என் மனதை தொட்டுவிட்டது ஒரு படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த திரைப்படத்தை நான் பார்க்கிறேன்.

பைசன் திரைப்படம்: இது முழுக்க முழுக்க மாரி செல்வராஜின் கலை படைப்பு அதில், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்ப்போம் என்ற ஆர்வத்தோடு தான் படம் பார்க்க சென்றேன். அதனால் இதற்கு முன்பு வந்த எந்த விமர்சனத்தையும் நான் பார்க்கவே இல்லை. மாரி செல்வராஜ் சாதியை பற்றி படத்தில் பேசி இருக்கிறார் என சொல்கிறார்கள். ஆனால், அவர் இருப்பதை தான் படத்தில் காட்டி இருக்கிறார். எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், விளையாட்டில் சாதி, மதம் இருக்கிறது. இந்தியாவில் அது கட்டாயம் இருக்கிறது அதை மறுக்க முடியாத உண்மை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் ஏதோ ஒரு இடத்தில் அந்த சாதியால் தடுத்து நிறுத்தப்பட்டது இருப்பார். தடுப்பது நிறுத்தியது யார் என்பது கூட நமக்கு நன்றாகத் தெரியும். அனைவருக்குமே கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன, ஆனால், யார் மூலவரை அடைவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்.
பைசன் சாதிய பெருமையை பேசும் படமா: மாரி செல்வராஜ் பைசன் திரைப்படத்தில் இரண்டரை மணி நேர நேரத்தில் அனைத்து விஷயங்களையும் சொல்லி இருக்கிறார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் நடக்கும் யுத்தம், அதே சமூகத்திற்குள் நடக்கும் போட்டி பொறாமை பிரச்சனைகள், அதையும் தாண்டி விளையாட்டில் நடக்கக்கூடிய அரசியல் இப்படி அனைத்தையுமே அந்த பைசன் திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தை மாரி சொல்வதற்கு, உறுதுணையாக இருந்தவர் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இருவரும் ஒரே கருத்து கொண்டவர்கள் என்பதால் இந்த திரைப்படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்திருக்கிறது. ஆனால், படம் வெளியான பின் படம் குறித்து பலவிதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பைசன் படம் சாதிய பெருமையை பேசும் படம் இல்லை என சேகுவேரா படம் குறித்து பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











