குழந்தையின் சாபம் சும்மா விடாது... பத்திரிக்கையாளர் முன் கொந்தளித்த ஜாய் கிரிஸில்டா!

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணமான புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். மேலும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.

அவரிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணையை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டு நாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்பதற்கான விஷயங்களை அனைத்தையும் சொல்ல வேண்டி இருந்ததால் விசாரணைக்கு ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. மாதம்பட்டியும் நானும் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை ஒப்படைத்து இருக்கிறேன், அது என்ன என்பதை எப்போது இப்போது சொல்ல முடியாது. விசாரணை நியாயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

Madhampatty Rangaraj Joy Crizildaa press meet
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா: மேலும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், மாதம்பட்டி ரங்கராஜை நான் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக பலர் எழுதுகிறார்கள். அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். அதுதான் உண்மை. ஒரு விஷயம் தெரிந்தால் அதை பற்றி எழுதுங்கள் தெரியவில்லை என்றால், தவறாக எழுதாதீர்கள். ஒரு பெண் துணிந்து, தைரியமாக வந்து ஒரு விஷயத்திற்காக போராடினால் அவளை பற்றி தப்பாக விமர்சனம் செய்தால் என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி வந்து போராடுவார்கள்.

குழந்தையின் பாவம் சும்மாவிடாது: அதேபோல பல youtube தளத்தில் என்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வீவ்ஸ் வருகிறது என்பதற்காக எதுவுமே தெரியாமல் யாரைப் பற்றியும் பேசக்கூடாது. அது மட்டுமல்லாமல் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை பற்றி அவதூறாக பேசினால். இந்த குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது. உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள், அவங்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு நடந்தால், என்ன செய்வீர்கள். அதை புரிந்து கொண்டு, உண்மை என்னவென்று தெரிந்தால் மட்டும் எழுதுங்கள்.

அவர் தான் அப்பா: ஒரு பெண்ணைப் பற்றி எவ்வளவு விமர்சனம் செய்து பேச முடியுமோ அவ்வளவு பேசுகிறீர்கள். ஆனால், ஏன் ஒரு ஆணை பற்றி யாரும் பேசுவதில்லை. நான் வெளியில் வந்தவுடன் என்னை சுற்றி பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்கிறீர்கள். அதே கேள்வியை ஏன் நீங்கள் அவரிடம் கேட்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரை ஏன் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பதில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணை கேள்வி கேட்டு அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. இப்பவும் சொல்கிறேன் அவரை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. என்னை அவர் திருமணம் செய்து கொண்டார், இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். இந்த குழந்தைக்கு அவர் தான் அப்பா, என் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நான் செல்வேன் என ஜாய் கிரிஸில்டா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X