»   »  இந்தி ஆதிக்கம் - கொந்தளிக்கும் சேரன்

இந்தி ஆதிக்கம் - கொந்தளிக்கும் சேரன்

Subscribe to Oneindia Tamil

தேசிய விருதுகள் வழங்குவதில் பெரும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்திக்குத்தான் அங்கு முதலிடம் வழங்கப்படுகிறது. தென்னிந்திய ெமாழிப் படங்களை படு கேவலமாக பார்க்கிறார்கள் என்று இயக்குநர் சேரன் குமுறியுள்ளார்.

தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பவர் சேரன். ஆனால் இம்முறை சற்று ஆவேசத்தோடும், ஆதங்கத்தோடும் வெளிப்படுத்தினார். சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சேரன், தேசிய விருதுகளில் காட்டப்படும் பாரபட்சம் குறித்து பொங்கித் தள்ளி விட்டார்.

சேரனின் பேட்டி இதோ ...

தேசிய அளவில் விருது பெறும் படங்கள், கலைஞர்களைத் தேர்ந்ெதடுக்கும் கமிட்டியை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு உரிய விருதுகள் கிடைக்கும். இல்லாவிட்டால் நல்ல படம் எடுக்கும் அத்தனை பேரும் மசாலாப் படங்களுக்குப் போக வேண்டியதுதான்.

விருதுக் கமிட்டியில் மொத்தம் 16 பேர் உள்ளனர். இதில், நான்கு தென் மாநிலங்களிலிருந்தும் தலா 2 பேரை தேர்வு செய்கிறார்கள். மற்ற 8 பேரும் வட மாநிலத்தவர்கள்தான்.

இப்படிப்பட்ட நிலையில் தங்களது பெரும்பான்மை பலத்தை வைத்து இந்திப் படங்களுக்கும், இந்தி நடிகர்களுக்கும் விருதுகளை அள்ளிக் ெகாடுத்துக் ெகாள்கிறார்கள்.

தென் மாநிலங்களிலிருந்து இடம் பெறும் குழுவினருக்கிடையே ஒற்றுமை இருப்பதில்லை. தண்ணீர் கொடுப்பதற்கே தயங்கும் நமது அண்டை மாநிலங்கள், விருதுக்கு மட்டும் பக்கத்து மாநிலக் கலைஞர்களைப் பரிந்துரைக்கவா போகின்றன?

தென் மாநிலப் பிரநிதிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தகுதியுடைய படங்களை ஆணித்தரமாக, ஒருமித்த குரலில் பரிந்துரைக்கும் நிலை வரும் வரை இந்தியின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். தென் மாநிலங்களைச் சேர்ந்த நல்ல படங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படத்தான் செய்யும்.

தென்னக திரையுலகுக்கு அநீதி இழைக்கப்படுவது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. சிவாஜி கணேசனுக்கு ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்படாததை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.

அவரது காலத்தில் அவர் நடித்த நடிப்பும், அவர் போட்ட வேடங்களும் மிகச் சிறப்பானவை, மற்ற நடிகர்களை பல முறை நடிப்பால் தூக்கி சாப்பிட்டவர். அவருக்கே விருது கொடுக்கப்படவில்லை. காரணம அவரை அரசியல் கண்ணோட்டத்துன் பார்த்ததுதான்.

மொத்தத்தில் தேசிய விருது என்பது பெயரளவில்தான் தேசியமாக உள்ளது. ஆனால் விருதுகள் எல்லாமே இந்தித் திரையுலகுக்குத்தான் தரப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்றார் சேரன்.

Please Wait while comments are loading...