»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிஷா என்ற இளம் பெண்ணை இயக்குனர் சேரனும், தங்கர்பச்சானும் கற்பழித்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

சேரன் கூறுகையில்,

மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமாவையே வாழ்க்கையாக நினைத்து சென்னைக்கு வந்துபோராடியவன் நான். உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் கிடைத்துள்ள நிலையில்சூழ்ச்சிக்காரர்களால் களங்கப்படுத்தப்பட்டு நிற்கிறேன்.

என் நிம்மதியும், என் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறிகொடுத்துவிட்டேன். இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது. என் மீதான களங்கத்தை நான்எப்படித் துடைக்கப் போகிறேன்?

பல வருடம் கழித்து நீதிமன்றத்தில் குற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலும், மக்களிடம் பெற்றபெயரை எப்படி திரும்பவும் நான் சம்பாதிப்பது?

முதலில் அந்தப் பெண் நிஷா திருமணமாகதவர் என்றார்கள், அப்புறம் திருமணமானவர்என்கிறார்கள். பல வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்கிறது போலீஸ். விபச்சாரத்தில்இருந்தவரை நான் எப்படி முதன்முதலில் கெடுக்க முடியும்?

என் தாயும் தந்தையும் போன் செய்து என்னிடம் அழுகிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில்சொல்வேன். ஏன் இப்படி ஒரு சூழ்ச்சி செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்தார்கள் என்றுபுரியவே இல்லை.

நான் யாருக்கும் சிறு துரோகமும் செய்யாதவன். இந்தக் குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்கும் வரைஓய மாட்டேன் என்றார் சேரன்.

தங்கர்பச்சான் கூறியதாவது:

நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசிவிடுகிற ஆள். என்படைப்புகள் மூலம் என்னால் ஆனதை தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்து கொண்டிருக்கிறது ஒருகலைஞன்.

இதைப் பொறுக்க முடியாத தமிழினத் துரோகிகள் என்னையும் சேரனையும் அழித்தொழிக்கும்கேவலமான வேலையில் இறங்கியிருக்கிறார்கள். படிக்காத பெற்றோருக்கு பிள்ளையாக, ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் நான்.

என் கல்வியால் உயர்ந்தவன். உலக இலக்கியம், உலக சினிமா பற்றி ஆர்வம் கொண்டவன். என்படைப்புகளையும் தரத்துடன் தர முயல்பவன். இதைப் பொறுக்க முடியாத, கறுப்புத் தமிழனின்வளர்ச்சி பிடிக்காத சிலர் செய்த சதி தான் இது என்றார்.

சேரன், தங்கர்பச்சான் மீது பெண் கற்பழிப்பு புகார்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil