4 இட்லிக்கு கஷ்டப்பட்டாரா தனுஷ்? சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்.. செய்யாறு பாலு சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் 4 இட்லிக்கு கஷ்டப்பட்டேன் என்று சொன்னது குறித்து செய்யாறு பாலு பேசி உள்ளார்.

அதில்,இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பேசிய தனுஷ்,
பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும், நான் பார்த்த மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை. என் சின்ன வயதில் நான் பூக்களைப் பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி, இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை. நாம் நம்முடைய வேர்களையும் வரலாற்றையும் எப்போதும் மறக்கக் கூடாது என்று பேசி இருந்தார். போதுவாக எந்த நடிகர்கள் இப்படித்தான் சிறுவயதில் தான் பட்ட கஷ்டத்தை சொன்னார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் திநகரில் கடை முன் படுத்து இருந்தேன் என்றார். அதே போல, வடிவேலுவும் தான் கஷ்டப்பட்டதை பல முறை பேசி இருக்கிறார்.

Idli kadai Cheyyaru Balu
Photo Credit:

இட்லிக்கு கஷ்டப்பட்டாரா தனுஷ்: ஆனால், தனுஷ் சிறுவயதாக இருக்கும் போதே, கஸ்தூரி ராஜா ஒரு அசோசியட் டைரக்டராகத்தான் இருந்தார். அப்படி இருக்கும் போது அவருக்கு நல்ல சம்பளம் தான் கிடைத்து இருக்கும். ஆனால், நான்கு இட்லிக்காக பூக்களை பறித்து, அதில் வந்த காசில் சாப்பிட்டேன் என்று தனுஷ் சொல்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதேபோலத்தான் ராயன் இசைவெளியீட்டு விழாவில், போயஸ் கார்டனில் வீடு வாங்கியதை பற்றி பேசி, ஒரு செங்கலைக்கூட உருவமுடியாது என்றார். தனுஷ் இப்படி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு காரணம், படம் ஓடுவதற்கு இதுவும் ஒரு யுக்தி. இப்படித்தான் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி, தான் பட்ட கஷ்டத்தை பற்றி பேசுவார் அதைத்தான் தற்போது தனுஷ் செய்து வருகிறார்.

இளைய சூப்பர் ஸ்டார் : இது மட்டுமல்லாமல் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நேரு ஸ்டேடியம் முழுக்க இளைய சூப்பர் ஸ்டார் என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது, தனுஷ் ரஜினிக்கு மாப்பிள்ளையாக இருந்தால் இப்படி போஸ்டர் ஓட்டுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், இப்போது நிலைமை வேறாக இருக்கும் போது, தனுஷ் எப்படி இளைய சூப்பர் ஸ்டார் ஆவார், இந்த போஸ்டரை ஓட்டியது யார், இப்படி போஸ்டர் ஓட்டியது தனுஷூக்கு தெரியுமா... சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தே இப்போது தான் ஓய்ந்தது. நிச்சயம் இந்த போஸ்டரால் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X