லீக்கான வீடியோ.. வாழ்க்கையை தொலைத்த லட்சுமி மேனன்.. செய்யாறு பாலு சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் லட்சுமி மேனன், கொச்சியில் ஐடி ஊழியரைக் கடத்தி, தாக்கியதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக, லட்சுமி மேனனின் மூன்று நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ள நிலையில், லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளம்பி இருக்கும் இந்த செய்தி செய்து குறித்து சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் பேசி உள்ளார்.

அதில்,நேற்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசக்கூடிய பொருளாக இருந்தது நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு செய்தி தான். பாரில் ஏற்பட்ட தகராறு லட்சுமிமேனன் குடித்து விட்டது தகராறு ஈடுபட்டதாக பல செய்திகள் பரவின இந்த செய்தியில் பெரிதாக என்ன இருக்கிறது. நடிகைகள் குடிப்பதும், பெண்கள் குடிப்பதும் இந்த காலத்தில் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில் இதைப்பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பெண்கள் குடிப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் முக்கியமான ஒருவர் எதை செய்தாலும் அதை பின்பற்றுவதற்கு என்று சில பேர் இருக்கிறார்கள், அதற்காகத்தான் அது பேசுபொருளாகிறது.

நடிகை லட்சுமி: இது சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக கேரளாவில் இருக்கும் ஒரு பத்திரிக்கை நண்பரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அங்கு நடந்த சம்பவம் குறித்து என்னிடம் அவர் கூறினார். நடிகை லட்சுமிமேனன் ஆண் நண்பர்கள் சில பெண்களுடன் குடிப்பதற்காக பாருக்கு சென்றுள்ளார். அந்த பாரின் ஐடியில் வேலை செய்யம் சில பேரும் வந்து இருக்கிறார்கள். அப்போது அந்த ஐடி ஊழியர்கள் தொடர்ந்து லட்சுமி மேனனை கேலியும் கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.

lakshmi menon case
Photo Credit:

தலைமறைவு: ஒரு கட்டத்திற்கு மேல் சண்டை பெரியதாகி விட்டதால் ஐடி ஊழியர்கள் பிரச்சனை வேண்டாம் என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். ஆனால், லட்சுமி மேனனின் நண்பர்கள் அவர்களை துரத்தி சென்று காரை வழிமறித்து பாட்டிலால் அவர்களின் மண்டையில் அடித்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர் தற்போது வரை லக்ஷ்மிமேனன் தலைமறைவாகத்தான் இருக்கிறார்.

இணையத்தில் லீக்கான வீடியோ: சிறிய வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் நடிகை லட்சுமிமேனன். இந்த நேரத்தில் தான் நடிகை லட்சுமி மேனனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது, இதனால் மனம் நொந்து போன லட்சுமி மேனன், இனிமே சினிமாவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என வெறுத்து போய் ஒதுங்கினார். அதன் பிறகு ஓர் இரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மன அழுத்தத்தில் இருந்த லட்சுமி மேனன், படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு தராததால் பட வாய்ப்புகள் பறிபோனது. தற்போது படமே இல்லாததால் தினமும் குடி, ஆட்டம் என தனது வாழ்க்கையை தொலைந்துவிட்டார் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X