twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் ஜெயிப்பதற்கு நிறம் முக்கியமில்லை..திறமை மட்டுமே வேண்டும்.. நம்ம ஊரு நந்திதா தாஸ் !

    |

    சென்னை : சினிமாவில் ஜெயிப்பதற்கு நிறம் முக்கியமில்லை ,திறமை மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார் நம்ம ஊரு நந்திதா தாஸ் என்று அழைக்கப்படும் சரண்யா ரவிச்சந்திரன்.

    பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் கிட்டத்தட்ட 130 குறும்படங்களுக்கு மேல் நடித்து உள்ளார் .

    பாலா படத்தில் நடித்ததே ஒரு வரம் என்று கூறியுள்ளார் சரண்யா. இது வரை சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

     வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா வைரஸ்.. பிரியாணி வியாபாரியாக மாறிய பிரபல சினிமா பட தயாரிப்பாளர்! வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா வைரஸ்.. பிரியாணி வியாபாரியாக மாறிய பிரபல சினிமா பட தயாரிப்பாளர்!

    பிரசவக்காட்சி

    பிரசவக்காட்சி

    இயக்குனர் பாலாவின் வர்மா சமீபத்தில் OTT யில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதும், சில காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .அதில் துருவ் விக்ரம் பிரசவம் பார்க்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. அந்த காட்சியில் அலறித்துடித்து குழந்தை பெற்று எடுக்கும் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார் சரண்யா .

    டைட்டிலில் மட்டும்

    டைட்டிலில் மட்டும்

    நடிப்பு திறமை இருந்தும் க/பெ. ரணசிங்கம் படத்தில் டைட்டில் கார்டு பாட்டில் தன் கணவனை நினைத்து ஏங்கும் ஒரு பிரேமில் மட்டும் நடித்து உள்ளாரே என்று பலரும் கேட்டனர். மாநிறமாக இருப்பதனால் இவர் காட்சிகள் நீக்கப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

    பல முயற்சிகள்

    பல முயற்சிகள்

    கொஞ்சம் ஒல்லியான உடம்பு, பார்த்தவுடன் பிடிக்கும் சிரிப்பு, அளவான மூக்கு, பேசும் கண்கள் கொண்ட அழகான முகம் மொத்தத்தில் இயற்கை தமிழ் அழகு. சீக்கிரம் தமிழ் சினிமாவால் அங்கீகரிக்கப்பட்டு ஜொலிப்பேன் என்ற உறுதியான நம்பிக்கை பேட்டி எடுக்கும் நம்மையும் சேர்த்தே உற்சாகப்படுத்துகிறார் சரண்யா ரவிச்சந்திரன்.

    குறும்படம்

    குறும்படம்

    சினிமாவிற்கு வந்த 5 ஆண்டுகளில் 130 ற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ள இவர் காவல் தெய்வம், கதையின் நாயகி போன்ற குறும்படங்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் வசந்த், இயக்குனர் வசந்த பாலன் போன்ற திரையுலக சாதனையாளர்கள் கைகளில் "சிறந்த நடிகைக்கான" விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விடாமுயற்சி

    விடாமுயற்சி

    குறும்படங்கள் மட்டும் இல்லாமல் , இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதில் ரங்கா இயக்கத்தில் வெளிவந்த "ஆட்டோசங்கர்" சீரியசில் ஆட்டோசங்கர் மனைவியாக நடித்து நல்ல அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இது தவிர ஜீ 5 ல் பூர்ணா நடிப்பில் வெளிவந்த "கண்ணாமூச்சி" யில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது. தற்போது இவர் ஆனந்த விகடன் தயாரிப்பில் சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் "வல்லமை தாராயோ" என்ற வெப் சீரிஸ்ல் பொற்கொடி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

    நெகடிவ் கதாபாத்திரம்

    நெகடிவ் கதாபாத்திரம்

    எத்தனையோ படங்கள் நடித்தாலும், தனக்கென ஒரு இடம் பிடிக்க போராடிக்கொண்டு இருக்கும் சரண்யா , அழுத்தமான காதல் படங்கள், பயோபிக், நெகடிவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக போராடி கொண்டு இருக்கின்றார்.

    விடாமுயற்சி

    விடாமுயற்சி

    இதுவரை கிட்டத்தட்ட 32 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் வந்த "காதலும் கடந்து போகும்" படத்தில் தொடங்கி றெக்க, மேயாத மான், 96, ராட்சசன், கோலிசோடா 2, செம, தர்மபிரபு வடசென்னை, சைக்கோ, போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் பார்த்த இவரை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சீறு போன்ற படங்களில் கொஞ்சம் அதிக நேரம் பார்க்க முடியும். சினிமாவில் ஜெயிப்பதற்கு நிறம் முக்கியம் இல்லை , விடாமுயற்சியினால் வெற்றி பெறுவேன் என்று வைராக்கியமாக போராடி கொண்டு இருக்கிறார் சரண்யா.

    English summary
    Color is not important to win in cinema .. Saranya interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X