குடித்துவிட்டு நள்ளிரவில் டார்ச்சர் செய்த வைஷூ.. மருமகன் ரொம்ப நல்லவர்.. ரகசியத்தை உடைத்த மாமியார்!

சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும்,அதில் நடித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது விஜே வைஷூ என்பவர் நாஞ்சில் விஜயன், என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என புகார் கொடுத்து இருந்தார்.

சோஷியல் மீடியாவில் இது பெரும் புயலை கிளப்பு இருக்கும் நிலையில், நாஞ்சில் விஜயனின் மாமியார்,
Galatta Voice சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் மருமகன் நாஞ்சில் விஜயனை பற்றி வைஷூ சொல்வது எல்லாமே பொய். வைஷூ தான் நாஞ்சிலுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்காக என்னிடம் பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். அதில் உண்மை இல்லை, நடிகை பாலாம்பிகா ஒரு முறை நாஞ்சில் விஜயனின் தங்கை வளைகாப்பிற்கு என்னை அழைத்துச் சென்றார். அன்று தான், நான் நாஞ்சில் விஜயனை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் ரோபோ சங்கரும், அவருடைய மனைவியும், என் மகளை நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சினிமா குடும்பம் என்பதால் நான் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், இருவரும் சேர்ந்து நாஞ்சில் விஜயன் மிகவும் நல்ல பையன் என கூறியதால் அதன் பிறகு தான் திருமணமே நடைபெற்றது.

Nanjil Vijayan vaishu transgender
Photo Credit:

மாமியார் பேட்டி: திருமணத்திற்கு முன்பே நாஞ்சில் விஜயனும் வைஷூவும் பழகியது எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார். அப்படியே தெரிந்திருந்தால் எந்த தாயாவது, மகளை திருமணம் செய்து கொடுப்பார்களா? எப்படி எந்த விஷயத்தையும் வைஷூ என்னிடம் சொல்லியதே இல்லை. இப்பொழுது, சொல்வதற்கான காரணம் என்ன. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி கெடுக்கலாம். இதற்கு எல்லாம் வைஷூவிடம் ஆதாரம் இருக்கிறது. அப்படி அந்த ஆதாரம் இருந்தால், அதை காட்டி இருக்கலாமே, அதை ஏன், வைஷூ செய்யவில்லை என்றார்.

நள்ளிரவில் டார்ச்சர்: பேட்டியின் போது செல்போனில் பேசிய நாஞ்சில் விஜயனின் மனைவி மரியா,வைஷூ குடித்துவிட்டு நள்ளிரவில் ஃபோன் செய்து என்னுடைய கணவரை டார்ச்சர் செய்வார். இதனால் எனக்கும் அவருக்கும் பல முறை சண்டைகள் வந்துள்ளன. அப்பொழுது என்னுடைய கணவர், அந்த பெண்ணுக்கு யாரும் இல்லை, பாவம் என்பார். பாவம் பார்த்தது தான் தற்போது வினையாக மாறி இருக்கிறது. வைசுக்கு யாரும் இல்லை என்பதால், திருமணத்திற்கு முன்பு, பல உதவிகளை என்னுடைய கணவர் செய்திருக்கிறார். ஆனால், திருமணமான பிறகும் நள்ளிரவில் போன் செய்து ஒரு குடும்பத்தை கெடுப்பது நியாயமா? அதேபோல என்னுடைய கணவருக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பதாக வைஷூ சொல்லி இருக்கிறார். அது எல்லாமே பொய். என்னுடைய கணவருக்கு தான் பலரும் பணம் தர வேண்டி இருக்கிறது. அதை கூட அவர் கேட்க மாட்டார் என நாஞ்சில் விஜயனின் மனைவி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X