எல்லாமே மண்ணாபோச்சு.. கடைசி வரை நிறைவேறாத ரோபோ சங்கரின் ஆசை.. என்னனு தெரியுமா?

சென்னை: வயிறு வலிக்க பலரை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறவே இல்லை என மதுரை முத்து தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இரண்டு வருடத்திற்கும் முன்பு ரோபோ சங்கர், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அதில், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் திடீரென அவர் மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் மனைவியுடன் அழகாக நடனம் ஆடியிருந்தார். அதுவே கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

Robo Shankar Death Dream
Photo Credit:

ரோபோ சங்கர்: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தவே கூடாது. அது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால், குடிப்பதில் இருந்து முற்றிலுமாக மாறி இருந்த ரோபோ சங்கரை இறைவன் அழைத்துக் கொண்டார். அவரது இறப்பு எனக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. சக கலைஞனாக அவருடன் நான், இருபது வருடம் பயணித்து இருக்கிறேன். வெறும் 1500 ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் பயணம் செய்தோம். அவருடைய நினைவு எக்கச்சக்கமாக என்னுடன் மனதில் பதிந்து இருக்கிறது.

மிமிக்ரி அசுரன்: ரோபோ சங்கர் ஒரு அசாத்தியமான கலைஞன். மிமிக்ரி அசுரன் என்று சொல்லலாம். மிமிக்ரி மட்டுமில்லாமல், சவுண்டு எபெக்ட், அதாவது நான்கு இசை கருவிகளில் இருந்து வரும் இசையை அவர் ஒருவரே இசைத்து காட்டுவார். அப்படி திறமையான கலைஞர் நம்மை விட்டு போனது தான் வேதனையாக இருக்கிறது. பேரனுக்கு காதுகுத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கடைசியில் இப்படி ஆகிவிட்டது? அவருடைய இழப்பை நாம் ஒரே வார்த்தையால் சொல்லிவிடுவோம். ஆனால், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்குத் தான் அந்த வேதனையும் வலியும் தெரியும்.

நிறைவேறாத ஆசை: ரோபோ சங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர் அவருடைய படத்தில நடித்துவிட என்பது அவரின் ஆசையாக இருந்தது. ரோபோ சங்கருக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்போது, அவர் கமலஹாசன் அவரின் போஸ்டரை ஓட்டுவார். விஸ்வரூபம் படம் வெளியான போது, படம் வெற்றிபெற கையில் சூடத்தை ஏற்றி வழிபாடு நடத்தினார். அப்படி ரோபோ சங்கர் கமல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு கமலின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மதுரை முத்து கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X