For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலை நில தெய்வமான கொற்றவை மூலம் பெற்றவை என்ன? C.V. குமார் ஒரு சுவாரஸ்ய பேட்டி!

  |

  சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த C.V. குமார் தற்போது கொற்றவை படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.

  ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்‌ஷா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, எழுத்தாளர் தமிழ்மகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

  குட்டி பவானி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மிரட்டலான டைட்டில் போஸ்டர் வெளியானது! குட்டி பவானி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மிரட்டலான டைட்டில் போஸ்டர் வெளியானது!

  பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவில் பிரமாண்ட படைப்பான கொற்றவை, மூன்று பாகங்களாக வெளிவரப்போகும் இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான CV குமார் நமக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ..

  காலம் கடந்த கொற்றவை

  காலம் கடந்த கொற்றவை

  கேள்வி : " கொற்றவை மூனு பார்ட்டா வரப்போகுதாமே ?"

  பதில் : " ஆமா.. மூனு பார்ட்டும் சேர்த்து கிட்டத்தட்ட 7-8 மணி நேரம் கொண்ட படம் இது. கொற்றவை தமிழர்களின் ஆதி வழிபாட்டு தெய்வம் . இப்ப கொற்றவை வழிபாடே இல்ல. பாலை நில தெய்வமான கொற்றவையில இருந்துதான் பிற தெய்வங்கள் வந்தது. பிறகு துர்கைன்னு மாற்றப்பட்ட வரலாறும் உண்டு. இந்த கொற்றவை திரைப்படம் முதல் பார்ட்,கிமு இரண்டாம் நூற்றாண்டயும், பிறகு 13ம் நூற்றாண்டையும், பிறகு 21ம் நூற்றாண்டுலயும் நடக்குற கதைதான். ஒரு செய்திய கரெக்ட்டா கொண்டு போயி சேர்க்கனும். அதுக்கு தாராளமா மூனு பார்ட் எடுத்தா தான் முடியும் .

  ஓடிடி இல்லை

  ஓடிடி இல்லை

  கேள்வி : படம் வெளியீடு எப்போ.. எப்படி இருக்கும்?

  பதில் : டப்பிங் வேலைகள், போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ல்லாம் போயிட்டு இருக்கு. கண்டிப்பாக இந்த படம் தியேட்டர்ல தான் வெளியாகும் . ஓடிடி கிடையாது. தியேட்டர்ல வந்தா தான் இந்த படத்தின் ப்ரமாணடம் மற்றும் விசுவல் எபக்ட்ஸ் மெனக்கெடுத்தலும் அனைவருக்கும் பலன் அளிக்கும் .

  தமிழ் தெரியாதவங்க நடிக்க வேண்டாம்

  தமிழ் தெரியாதவங்க நடிக்க வேண்டாம்

  கேள்வி : கதாப்பாத்திரங்கள் தேர்வு எப்படி இருக்கு ?

  பதில் : ரொம்ப பார்த்து பார்த்து கவனமா தேர்ந்தெடுத்துருக்கேன். வெறும் டயலாக்க படிச்சிட்டு போற கேரக்டரா இல்லாம.. பூர்வகுடிமக்கள் போலவே இருக்க, திராவிட கலர்ல இருக்க மாதிரியான கேரக்டர்கள் தான் தேர்ந்தெடுத்துருக்கு. அது மட்டும் இல்லாம படம் ஆரம்பிக்கிறப்ப என்னோட அசிஸ்டண்ட் கிட்ட சொன்ன முக்கியமான விஷயம், தமிழ் எழுத படிக்க தெரிஞ்சிருக்கனும். தங்க்லீஷ் தான் தெரியும்ங்கிற ஆட்கள் வேண்டவே வேண்டாம். ஏன்னா இது உணர்வு சார்ந்தது. அது வார்த்தைகள்ல தான் வெளிப்படும். இது மூனு காலத்துல நடக்கிற கதை. தமிழ் நல்லா பேசுறவங்களுக்கே அது சில சமயம் தடுமாறும். "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" ங்கிற வார்த்தையவே, ஒரு ஆர்ட்டிஸ்ட் கிட்டத்தட்ட 3 மணி நேரம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால சொல்ல முடியல. அதனாலதான் இப்படி சில விஷயங்கள்ல ரொம்ப உறுதியா இருக்கேன்.

  போர்க்கால வீரர்கள் உடை

  போர்க்கால வீரர்கள் உடை

  கேள்வி : பாகுபலி மாதிரியான படமா இருக்குமா கொற்றவை


  பதில் : நிச்சயமா இல்ல. அது வேற இது வேற.. பாகுபலிக்கு வரலாற்று ஆதாரங்கள் எல்லாம் கிடையாது. அதுல புனைவுகள், கற்பனைகள் அதிகம். இதுல உண்மையா நடந்த விஷயங்கள சொல்லிருக்கோம். அந்த காலத்துல இப்படி எல்லாம் கூட நடந்திருக்குமோ என்ற கற்பனையோடு சேர்ந்த கதை. அதனால இது வெறும் கற்பனையாக மட்டும் உருவாக்காம உண்மையும் கலந்து உருவாக்கிருக்கோம். உதாரணத்திற்கு இரண்டாவது நூற்றாண்டில் போர் நடந்தப்போ, அந்த போர்க்கால வீரர்கள் எப்படி உடை அணிஞ்சிருப்பாங்க? அவங்க வெறும் வேஷ்டி மட்டும் தான் கட்டி இருப்பாங்க. இரும்புக் கவசம் இதெல்லாம் போட்டுருக்க மாட்டாங்க. வேணும்னா ராஜாக்கள் போட்டிருக்கலாம் ஆனா படைவீரர்கள் அப்படி பண்ணி இருக்க வாய்ப்பு கிடையாது. இப்படி ஒவ்வொரு விஷயமா பார்த்துப் பார்த்து நேர்த்தியா இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கு.

  எப்படி இது சாத்தியம் ?

  எப்படி இது சாத்தியம் ?

  கேள்வி : உங்களுக்கான மாஸ், கிரேஸ் இன்னமும் இருக்கு. ரசிகர்கள் எந்த அளவுக்கு உங்கள உற்சாகப்படுத்துறாங்க.?

  பதில் : மாயவன் படத்தைப் பத்தின கருத்துக்கள் இன்னமும் வந்துகிட்டு இருக்கு . ஒரு படம் எடுத்து நாலு வருஷம் கழிச்சு அதுக்கப்புறம் இன்னைய வரைக்கும் மாசத்துக்கு 100, 200 கமெண்ட்ஸ் வருது. அதைப் பாக்குறப்போ நாம தப்பான வழியில போகல கரெக்டான வழியில போய்க்கிட்டு இருக்கோம்ன்னு உணர முடியுது , ஒவ்வொருத்தருடைய பல்ஸயும் ஈஸியா தெரிஞ்சிக்க முடியது..

  மாயவன் பார்ட்-2

  மாயவன் பார்ட்-2

  கேள்வி : அப்படின்னா மாயவன் பார்ட்-2 வர வாய்ப்பு இருக்கா..?

  பதில் : நிச்சயமா .. ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடியா இருக்கு. ரொம்ப பிசியா இருக்கறதால.. எப்ப வர்றன்னு சாட்டை வச்சி என்ன விரட்டி கிட்டு இருக்காங்க. வருவேன் - கண்டிப்பா மாயவன் பார்ட்-2 மூலம் ஒரு வித்யாசமான திரைக்கதையுடன் மீண்டும் நானும் எங்கள் குழுவும் வருவோம்

  பிசியாவாவும் பரபரப்பாவும்

  பிசியாவாவும் பரபரப்பாவும்

  கேள்வி : எப்படி உங்களால இப்படி துள்ளலா.. பரபரப்பா இயங்க முடியுது ?

  பதில் : ஸ்பாட்லயும் அப்படித்தா,. இறங்கி வேலை செய்வேன். கலகலப்பா பரபரப்பா இருப்பேன். அப்பதான் கூட வேலை செய்றவங்களுக்கும் ஒரு எனர்ஜியா இருக்கும். ஒரு ப்ரொடியூசரே.. டைரக்டரே இறங்கி வேல பாக்குறாரு.. நாம சும்மா அரட்ட அடிச்சிட்டு இருக்க கூடாதுன்னு ஆக்டிவா, ரசிச்சி தன் வேலைய செய்வாங்க. அதனால என்ன பிசியாவாவும் பரபரப்பாவும் வச்சிக்கிறது எனக்கு பிடிச்ச ஒன்னு.

  உழைப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்சி

  உழைப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்சி

  கேள்வி : கொற்றவைக்கான ஆராய்சிகள் முயற்சிகள், பெற்ற உதவிகள் என்ன?
  பதில் : சின்ன வயசுலருந்தே வரலாற்று மீதான ஆர்வம் உண்டு. ஒரு புக் வாங்கினாலே அது ஹிஸ்டாரிக்கல் புக்காதான் இருக்கும். அதனால புதுசா இப்ப ஆச்சர்யபடற மாதிரி எதுவும் இல்ல. வரலாற்றுல நடந்த விஷயங்கள கரெக்ட்டா கொண்டு சேர்க்கனும். அதான். தொல்பொருள் ஆராய்சியாளர் விஜய் மாதவன், மூலிகை அறிஞர் மதிவானன் , படைவீடு நாவல் எழுதிய தமிழ்மகன், மதுரை சண்முகம் இவங்க எல்லாமே ரொம்ப உதவியா இருந்தாங்க. அதுமட்டுமில்லாமல் நிறைய புத்தகங்கள் சதாசிவ பண்டாரத்தார் , நீலகண்ட சாஸ்திரிகள், ராஜமாணிக்கம் எழுதிய புத்தகங்கள் இதெல்லாம் ரொம்ப உதவியா இருந்துச்சு .

  இது அதுவா இருக்குமோ?

  இது அதுவா இருக்குமோ?

  கேள்வி :ஆயிரத்தில் ஒருவன் படைப்பு மாதிரி இருக்குமா கொற்றவை.? மக்கள் செல்வராகவன் ரேஞ்ச்க்கு சொல்றாங்களே?

  பதில் : இந்தப் படம் ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கம்பேர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. செல்வராகவன் சார் ஒரு மிகப்பெரிய கிங் மேக்கர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்த வெற்றியாளர் அவர் கூட நம்மள கம்பேர் பண்ண கூடாது. அவர் சொன்ன கதை வேற.. இது வேற..!

  கொற்றவை பெற்றவை

  கேள்வி : கொற்றவை மூலம் நீங்கள் பெற்றவை என்ன.. ?

  பதில் : நிறைய விஷயங்கள் இருக்கு. வரலாறுன்னு சொன்னா முதல்ல ராஜராஜன் பத்தியும் ராஜேந்திர சோழன் பத்தியும் தான் சொல்வோம். அவங்க 400,500 ஆண்டு ஆட்சி பண்ணாங்க. ஆனா பாண்டிய வம்சத்தினர் கிமு ல ஆரம்பிச்சி 17ம் நூற்றாண்டு வரை, நாயக்கர் காலம் வரை போரிட்டவங்க. உலக வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பயணித்த வம்சத்தினர். அது பற்றிய ஒரு தேடலும் உண்மைகளும் கொண்ட கதைதான் கொற்றவை. நான் பெற்றது மட்டுமல்ல.. தமிழ் சினிமாவும், கொற்றவை மூலம் பெற வேண்டியது நிறைய இருக்கு.என்று கலகலப்பாக சொல்லி முடித்தார் சி.வி குமார். பேச்சிலேயே படம் பார்க்க வைக்கும் ஆர்வத்தை தூண்டிய கொற்றவை இயக்குனர் சிவி குமார் பேசிய முழு வீடியோவை பில்மிபீட் யூட்யூப் லிங்க் மூலமும் காணலாம்.

  English summary
  Producer CV Kumar is directing the movie Kotravai and has shared his views on the movie with us.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X