»   »  குத்து பாட்டு வேண்டாம்: தீபு

குத்து பாட்டு வேண்டாம்: தீபு

Subscribe to Oneindia Tamil

குத்துப் பாட்டு வாய்ப்பே வேண்டாம், அப்படிப்பட்ட ஆட்டத்திற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்கிறார் தீபு.

அன்பு படம் மூலம் சினிமாவுக்கு ஹீரோயினாக நடிக்க வந்தவர் தீபு. ஆனால் அதற்கு முன்பே என் மனவானில் படத்தில் சின்ன கேரக்டரில் வந்து போயிருந்தார் தீபு.

அன்பு படம் அவருக்கு பெரிய வரவேற்பைத் தரவில்லை. இதனால் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது தீபுவின் தமிழ் மார்க்கெட். இடையில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தலை காட்டியிருந்தார்.

திருப்பதி படத்தில் அஜீத்தின் தங்கச்சியாக வந்து போனார். இப்படி தடுமாறிக் கொண்டிருந்த தீபுவுக்கு கன்னடம் கை கொடுத்துத் தூக்கி விட்டது. அங்கு தீபு பிரபல நாயகியாக மாறி விட்டார். ஹோம்லியான ரோல்களில் அங்கு அசத்திக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது லேசு பாசான கிளாமருக்கும் ஓ.கே. சொல்கிறாராம்.

இந்த நிலையில் சரத்குமாரின் நம்நாடு படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடிக்கு வந்துள்ளார் தீபு. தங்கச்சி வேடம் வேண்டாம் என்றுதானே கன்னடத்துக்குப் போனீர்கள். மறுடியும் தங்கச்சியாக வந்துள்ளீர்களே என்று கேட்டால், கதைக்கு முக்கியமான கேரக்டர் என்றால் நடிப்பதில் தவறில்லையே என்று விவரமாக பதிலளித்தார் தீபு.

தீபு ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அதாவது குத்துப் பாட்டுக்கு ஆடுவதில்லை என்பதுதான் அந்த வைராக்கிய முடிவு. அப்படிப்பட்ட பாடல் எனக்கு வேண்டாம். அதற்கு நான் ஆள் இல்லை. கவர்ச்சியாக நடிப்பது, குத்துப் பாட்டுக்கு ஆடுவது எனக்குப் பிடிக்காது. ஹோம்லியாகத்தான் நடிப்பேன் என்கிறார் தீர்மானமாக.

அப்படீன்னா இனிமேல் தமிழ், தெலுங்குப் படங்களில் தீபுவைப் பார்க்கவே முடியாதா??

Please Wait while comments are loading...