»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கலைமாமணி விருது கிடைத்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.

ஆனந்தம் என்ற படத்திற்கான ஷூட்டிங்கில் இருந்த அவர் விருது கிடைத்துள்ளது குறித்தும் ஆனந்தத்தோடு பேசினார். அவர் அளித்த பேட்டி:

எனக்கு கலைமாமணி விருது கிடைத்த தகவல் 2 மணி நேரத்திற்கு முன்பு தான் தெரியும். ரொம்ப சந்தோஷம். தாங்க முடியலை.

நான் ஏராளமான படங்களில் நடித்து வருகிறேன். 100வது படத்தை எட்டப் போகிறேன். அதெல்லாம் விட இந்த விருது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

எத்தனை படங்களில் நடித்தேன் என்பதை விட அந்த படம் மக்களுக்கு பயன்படும் கருத்துக்களை தந்துள்ளதா என்பது தான் எனக்கு முக்கியமாகபடுகிறது.

நான் நிடித்த படங்களில் காதல் கோட்டை, சூரியவம்சம், நீ வருவாய் என, பாரதி ஆகிய படங்கள் எனக்கு மன நிறைவை தந்தன.

என் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுக்கும் தமிழ் ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். அதை எப்படி வெளிக்காட்டுவது என்றேதெரியவில்லை. ரசிகர்கள் தான் என் தெய்வங்கள்.

என் நடிப்பு நல்ல கருத்துக்களை சொல்லவும், சமுதாயத்திற்கு பயன்படும் கருத்துக்களையும் சொல்ல வேண்டும். அந்த வகையில் பாரதி போன்ற படங்கள்சமுதாயத்திற்கு பயன்படும் கருத்துக்களை கொண்டது.

தமிழ் படங்களில் தான் அதிகம் நடிக்கிறேன். மலையாளத்தில் 5, தெலுங்கில் 3 படங்களிலும் நடிக்கிறேன். நான் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குதாவியவள். ஆனாலும், தமிழ் படங்களில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும்.

எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு விருது அறிவித்துள்ள முதல்வர்கருணாநிதிக்கு நன்றி என்றார் தேவயானி.

உழைப்புக்கு கிடைத்த ஊக்கம்:

நடிகர் அஜீத்குமார் கூறுகையில், இந்த விருது எனது பணிக்கு ஊக்கம் தரும். இந்த விருது கிடைத்ததற்கு முழு முதற் காரணமாக விளங்கும் என்ரசிர்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்றி என்றார்.

அரிதிலும் அரிது:

இயக்குனர், நடிகர் என்று பல முகங்களை கொண்ட டி.ராஜேந்தர் கூறுகையில், ஒரு கலைஞனாக பிறப்பது அரிது. கலைஞனாய் பிறந்து கலைத்துறையில் இத்தனைஆண்டுகள் இருப்பது அரிது.

இந்த மாதிரி விருது கிடைத்தது அரிதிலும் அரிது. விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நான் வளர்த்துக் கொள்வதில்லை. அதே சமயம் மக்கள் மனதில்எனக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரத்தை பெரிய விருதாக நினைப்பவன் நான்.

ஒரு மரம் என்று சொன்னால் அது கனி கொடுக்க வேண்டும். ஒரு கோயில் என்றால் அங்கு மணி ஒலிக்க வேண்டும். ஒரு கட்டுத்தறி என்றால் அது துணிகொடுக்க வேண்டும். ஒரு கலைஞன் என்று சொன்னால் அவன் வாழ்வில் பணி சிறக்க வேண்டும்.

கலையின் மாமணியாய், கலைஞானியாய், கலைத்தோணியாய் வாழ்ந்து கலைச்சேவை செய்யும் கலைஞரின் காலத்தில் இவ்விருதை பெறுவதை ஒரு கலைஞன் என்றமுறையில் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

வைட்டமின் மாத்திரை:

குணசித்திர நடிகருக்காக கலைமாமணி விருது பெறும் வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கூறுகையில், டி.வி. செய்தியின் மூலமாக தான் எனக்கு விருது கிடைத்தவிவரம் தெரிந்தது. 16 ஆண்டாக திரையுலகில் இருக்கும் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் இது. எனது கலைப்பயணத்தை தொடர்ந்திட கிடைத்தவைட்டமின் மாத்திரை இது என்றார் அவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil