twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதியவர்களிடம் கதை கேட்கவே யோசிக்க வேண்டியிருக்கிறது! - யுடிவி தனஞ்செயன்

    By Shankar
    |

    சென்னை: தாண்டவம் கதை ஒரிஜினலாக இயக்குநர் விஜய்யால் எழுதப்பட்டது. வேறு யார் கதையிலிருந்து காட்சிகள் கையாளப்படவில்லை என யுடிவி தனஞ்செயன் விளக்கம் அளித்துள்ளார்.

    விக்ரம் - அனுஷ்கா - எமி நடிக்க, யுடிவி பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் தாண்டவம். ஏஎல் விஜய் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

    இந்த நிலையில் படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடி ஒரு உதவி இயக்குநர், சங்கத்தில் புகார் செய்தார்.

    இதைத் தொடர்ந்து, யுடிவி சார்பில் அதன் நிர்வாகியான தனஞ்செயனிடமும், உதவி இயக்குநரிடமும் விசாரித்த இயக்குநர் சங்க நிர்வாகிகள் அமீர் மற்றும் ஜனநாதன் ஆகியோர், இருவரின் ஸ்க்ரிப்டையும் படித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து யுடிவி தனஞ்செயன் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி:

    இந்தப் படத்தின் கதை விஷயத்தில் வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காரணம், புகார் தெரிவித்துள்ள உதவி இயக்குநர் என்னைச் சந்திக்கும் முன்பே, நான் விஜய்யிடம் கதை கேட்டுவிட்டேன். அதைத் தொடர்ந்துதான் தெய்வத்திருமகள் படத்தின் வெற்றிவிழாவில், இதே டீமுடன் இணைந்து அடுத்து படம் செய்யப் போகிறேன் என்பதையும் அறிவித்திருந்தேன்.

    அதன் பிறகு ஒரு நாள் இந்த உதவி இயக்குநர் வந்து கதை சொன்னார். நான் கேட்டு முடித்ததும், வேறு கதை ஒன்றை நாங்கள் படம் பண்ண தேர்வு செய்துவிட்டதை அவரிடம் சொன்னேன். நாங்கள் முடிவு செய்த கதையில் ஒரு ப்ளைன்ட் கேரக்டர் வருகிறது. இந்த உதவி இயக்குநர் சொன்ன கதையின் ஒன் லைனிலும் ஒரு ப்ளைன்ட் பாத்திரம் வருகிறது. அவ்வளவுதான். இந்த ஒன்றைத் தவிர இரண்டின் திரைக்கதையும் வேறு வேறு.

    எனவே இந்தக் கதை வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தியதோடு அவரது ஸ்கிர்ப்டை கையோடு கொடுத்தனுப்பிவிட்டேன்.

    இதெல்லாம் நடந்தது, கடந்த செப்டம்பர் மாதத்தில். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஓடிவிட்ட பிறகு இப்போது போய் புகார் தந்திருக்கிறார்.

    மீண்டும் அந்த தம்பியை அழைத்து, என்ன பிரச்சினை என்று கேட்டேன். அதற்கு அவர், "நீங்கள் என் கதையை எடுத்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால், ஒருவேளை நான் சொன்ன ஸ்க்ரிப்டை முழுமையாகக் கேட்ட நீங்கள், அதில் ஏதாவது காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? என்று கேட்டார்.

    இதை என்னவென்பது? அவர் கதையைக் கேட்டதோடு சரி. எனக்கு சரிப்படாது என்றதுமே அதை திருப்பித் தந்துவிட்டேன். அதை நான் மறந்தேவிட்டேன். விஜய் சொன்னது புதிய ஸ்க்ரிப்ட். இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இருவரின் ஸ்க்ரிப்டுமே இயக்குநர் சங்கத்தில் உள்ளது. படித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.

    எனவே, 'அந்த சந்தேகம் உனக்கு இருந்தால், சங்கத்தில் புகார் தரலாம், சட்டப்படி கூட வழக்குப் போடலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை' என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டேன்.

    கதை கேட்டது ஒரு குற்றமா... அப்படிப் பார்த்தால் இனி யாரிடமும் எந்தத் தயாரிப்பாளரும் கதையே கேட்க முடியாதே. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சொல்லும்போதே கமிட் ஆகிவிட வேண்டும் என்ற கட்டாயம் அல்லவா வந்துவிடும்...

    விஜய்க்கு இந்த விவகாரம் எதுவுமே தெரியாது. அவர் எப்போதோ இந்த ஸ்க்ரிப்டை எழுதிவிட்டார். எனவே உதவி இயக்குநரின் கதையில் என்ன இருந்தது என்றுகூட அவருக்குத் தெரியாது.

    படம் வரட்டும். வந்த பிறகு அவர் கதையை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோமா என்று சொல்லட்டும். நான் அனைத்துக்கும் கட்டுப்படுகிறேன். அதைவிட்டு, படத்தில் என்ன எடுத்திருக்கிறோம் என்றே தெரியாமல் புகார் கூறுவது சரியல்ல.

    அப்படிப் பார்த்தால், பார்த்திபன் நடித்து வெளிவந்த சபாஷ் படத்தின் 'ஒன்லைன்'தான், இந்த உதவி இயக்குநர் என்னிடம் சொன்ன கதை. அவர் என்னிடம் கதை சொன்னபோதே, இது எனக்கு நினைவில் வந்தது. ஆனால் அவரை நோகடிக்க வேண்டாமே என அமைதியாக இருந்துவிட்டேன் அன்றைக்கு. நியாயமாக இயக்குநர் சுபாஷ் அல்லவா இதற்காக சண்டைக்கு வந்திருக்க வேண்டும்...", என்றார்.

    English summary
    Producer G Dhananjayan says that the story of Vijay directed Thaandavam is not copied from an assistant director. 'It is originally written by Vijay and no way it is connected to the assistant director's script,' says Dhananjayan.
 
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X