தனுஷுக்கு இந்த உணவுகள் தான் ரொம்ப பிடிக்கும்.. தனுஷின் ரீல் மகள் கொடுத்த ஸ்பெஷல் லிஸ்ட்!
சென்னை: கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் நானே வருவேன்.
இப்படம் வெளிவந்தது முதல் பல விமர்சனங்களை பெற்று வருகிறது, குறிப்பாக நடிகர் கமலஹாசனின் ஆளவந்தான் படம் போல் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், நடிகர்கள் பிரபு, யோகிபாபு மற்றும் தனுஷின் மகளாக ஹியா தவே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஹியா தவே நமது ஃபிலிம் ஃபீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

ஹேர் ஸ்டைல்
கேள்வி: நடிகர் தனுஷ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நடிகர் தனுஷ் ரொம்ப ஜாலியான டைப். அவர் செட்டுக்கு வந்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும். அவர் ரொம்ப இயல்பாகவும், பெரிய நடிகர் என்கிற பந்தாவும் அவரிடம் கிடையாது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும், அவருடைய ரசிகர்களிடம் இயல்பாக பேசுவார் என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை பார்த்தவுடன் வந்து ஹக் பண்ணுவார். அவரே மறந்து விட்டாலும், நானே அவரை கூப்பிட்டு ஹக் பண்ணுவேன். என்னுடைய ஹேர் ஸ்டைல் அவருக்கு ரொம்ப பிடிக்கும். நூடுல்ஸ் மாதிரி ரொம்ப சுருள் சுருளா இருக்கிறது என்று கூறுவார்.

எனக்கு பிடித்த பாடல்
கேள்வி: நானே வருவேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தில் எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும்?
பதில்: எனக்கு வில்லன் கதாபாத்திரம் செய்துள்ள தனுஷை தான் பிடிக்கும். அந்த கேரக்டர் தான் ரொம்ப இயல்பாக இருக்கும். மேலும் படத்தில் வருகின்ற தீரா சூரா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாடலை தான் நான் எப்பவும் ஹம் பண்ணிக்கிட்டு இருப்பேன். இந்த படத்தில நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்றார்.

இயல்பாக நடிப்பது எப்படி?
கேள்வி: இயக்குநர் செல்வராகவன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நானே வருவேன் படம் தான் எனது முதல் படம். இயக்குநர் செல்வராகவன் எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நான் நடித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இயல்பாக எப்படி நடிக்க வேண்டும் என்பதை இப்படம் மூலம் கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சின்சியராக பணிபுரிந்துள்ளனர். மேலும் என்னை அழகாக காட்டிய கேமராமேன் ஓம் பிரகாஷ்க்கு எனது நன்றி. எனக்கு அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்த இந்துஜா எனது அம்மா போல் இனிமையாக பழகக்கூடியவர் என்றும் தெரிவித்தார்.
மிகப்பெரிய கிப்ட்
கேள்வி: உங்கள் சினிமா பயணம் குறித்து...
பதில்: நான் செட்டிநாடு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த படத்தில் நடித்ததை பார்த்து எனது நண்பர்கள் போனில் வாழ்த்து தெரிவித்தார்கள். நான் சினிமாத்துறைக்கு வந்ததற்கு எனது அம்மாவும், அப்பாவும் தான் காரணம். அவர்களை போன்ற பெற்றோர்கள் எனக்கு அமைந்தது மிகப்பெரிய கிப்ட் என்றார். மேலும் அவர் கூறுகையில், நாங்கள் கீழ்ப்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் 'சஸ்கா சாட்'னு ஒரு ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறோம். படப்பிடிப்பிற்கு செல்லும்பொழுது, நான் தனுஷ்க்கு மோமோஸ், சாண்ட்விச், பாவ் பாஜி, ஆலு டிக்கி போன்ற உணவுகளை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=tb1O4sKzIfY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications











