நான் நடிக்க காரணமே தனுஷ் தான்.. கதை சொல்லும் போது நடந்த விஷயம்.. மிஷ்கின் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரான மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கும். தற்போது இவர் யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், நந்தலாலா கதை எழுதும் பொழுது தான், நான் ஒரு கதை ஆசிரியராகவே உருவானேன். அந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால், சென்னையில் இருந்து நானும் ஒரு சிறுவனும் பயணம் மேற்கொள்கிறோம், போகிற வழியில் பல மனிதர்களை நாங்கள் சந்திக்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருந்தாலும், நான் தொட்டவுடன் அவர்கள் நல்லவர்களாக விட வேண்டும் என்பது தான் ஒரு கதையின் கருவாக மனதில் வைத்து நான் எழுதினேன்.

Mysskin Dhanush interview
Photo Credit:

இயக்குநர் மிஷ்கின்: இந்த திரைப்படத்தின் கதையை பலரிடம் நான் சொன்னேன். ஆனால், யாருக்குமே அந்த படத்தின் கதை புரியவில்லை. கதை நன்றாக இருந்தாலும் இது வியாபார ரீதியாக வெற்றி பெறாது என்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் தாணுவிடம் நந்தலாலா படத்தின் கதையை சொன்னேன், கதையை கேட்டுவிட்டு கதையும் நன்றாக இருக்கிறது. ஆனால், இந்த படம் ஓடாது, எனக்கு எதுவுமே கிடைக்காது என்று சொன்னார்.

ஒருவன் நல்லவன் ஒருவன் கெட்டவன்: அதன் பிறகு ஒரு நாள் நாசர் அவர்களை சந்தித்தேன். அவர் புதிதாக வாங்கிய கருப்பு காரில் அவரின் குடும்பத்தினருடன் நாங்கள் சாப்பிட சென்றோம். அப்பொழுது அவர் என்னிடம் கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். கதையா? என்று யோசித்த போது, நாங்க வந்த கருப்பு காரின் அருகே வெள்ளைக்கார் ஒன்று வந்து நின்றது. அதைப்பார்த்ததும், இரண்டு நண்பர்கள் சார், அதில் ஒருத்தன் நல்லவன் ஒருவன் கெட்டவன் என கதை சொன்னேன். அடுத்து சொல்ல என்னிடம் கதை இல்லை. யோசித்து சொல்கிறேன் என்றேன். அதன் பிறகு 40 நாள் கழித்து நாசர் அவர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தார். வீட்டில் என்னுடைய அறை முழுக்க காகிதங்களில் சத்தியம், கிருபா இருவரின் கதாபாத்திரங்களை தனித்தனியாக எழுதி ஒட்டி வைத்து. அந்த திரைப்படம் தான் அஞ்சான்.

தனுஷ் சொன்னார்: அஞ்சான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் நந்தலாலா திரைப்படத்தை எடுக்க வேண்டும் என எனக்கு தோன்றியத. இந்த திரைப்படத்தின் கதையை தனுஷ் அவர்களிடம் சொன்னேன். கதையை கேட்டுவிட்டு தனுஷ், கதை நன்றாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாது. ஆனால், இந்த கதையில் நீங்கள் நடித்தால் நிச்சயம் இந்த திரைப்படம் வெற்றிபெறும்,நீங்க நன்றாக நடிக்கிறீர்கள் என்று சொன்னார். தனுஷ் சொன்னதை கேட்டு தான் நந்தலாலா திரைப்படத்தின் நான் நடித்தேன். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மனதிற்கு ஏதோ ஒரு திருப்தியை நந்தலாலா திரைப்படம் கொடுத்தது என்று இயக்குநர் மிஷ்கின் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X