»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் படங்களை ஓட விடாமல் செய்ய வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என தனுஷ் புகார் கூறுகிறார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் வெளியான சென்னை தியேட்டருக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சிலர் படம்நல்லாவில்லை என்று வதந்தி பரப்பினர். அதைப் பார்த்த தியேட்டர் அதிபர் அவர்களைப் பிடிக்க முயன்றுஓடிவிட்டனர். என் மீதுள்ள பொறாமையால் வதந்தி பரப்பப்படுகிறது.

இதைச் செய்பவர்கள் யார் என்று குறிப்பாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், என் வளர்ச்சியில்பொறாமை கொண்டவர்களின் செயல் இது. இது போன்ற வதந்தியைக் கேட்டு படம் பார்க்க வருபவர்கள் திரும்பிப்போனால் தியேட்டர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் இது திட்டமிட்டு செய்யப்படுவதாக நினைக்கிறேன்.

ராகவா படத்தில் நடிப்பதில் பிரச்சனையே கதை தான். பணம் பிரச்சனையல்ல. கதை பிடிக்காமல் எப்படி நடிக்கமுடியும்?. நான் ரூ. 3 கோடி கேட்பதாக சொல்வது உண்மையல்ல. ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மொய்தீன்தயாரிக்கும் படத்தில் முதலில் ரூ. 20 லட்சம் தான் சம்பளம் பேசப்பட்டது.

இப்போதும் அதே ஊதியத்துக்குத் தான்நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

உடனிருந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் டைரக்டர் ஸ்டான்லி கூறுகையில், படம் மிக நன்றாக போய்க்கொண்டுள்ளது.

தியேட்டர்களின் வசூலே இதற்கு சாட்சி. ஆனால், அதைக் கெடுக்க சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இந்தப் படத்தைத் தயாரித்துள்ள கிருஷ்ணகாந்த் நிருபர்களிடம் தந்த அறிக்கையில்,

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லா ஊர்களிலும் இரண்டு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.கடந்த 5 நாட்களாக வசூலைக் குவித்து வருகிறது. தியேட்டர் உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும்ஒரே வாரத்தில் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். அதன் பின்னர் எல்லாமே லாபமாகத் தான் இருக்கப்போகிறது.

உண்மை இப்படி இருக்க தனுஷின் அதிவேக வளர்ச்சியைத் தாங்க முடியாத சிலர் இந்தப் படத்தின் வெற்றியால்பாதிக்கப்படுவோம் என்று நினைக்கும் சிலர், படம் நல்லாயில்லை என வதந்தி பரப்புகிறார்கள்.

பொங்கல் படங்களிலேயே அதிக வசூலைப் பார்த்து வருவது இந்தப் படம் தான். இளைஞர்கள் மத்தியில்வெகுவாக ரசிக்கப்படும் தம்பி தனுஷை, நம் ஊர்ப் பையனான இந்த மண்ணின் மைந்தனை பற்றி நம்மவர்களேதரம் தாழ்த்திப் பேசுவதும் சிறுமைப்படுத்துவதும் எந்த வகையில் நியாயம்? என்று அந்த அறிக்கையில்கேட்டுள்ளார் கிருஷ்ணகாந்த்.

வதந்தியைப் பரப்புவது யார் என்று தனுஷ் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் சிம்பு மற்றும் ராகவா படத்தின்தயாரிப்பாளர்கள் தரப்பையே அவர் சுட்டிக் காட்டுவதாக ஒரு சந்தேகம் உள்ளது.

காசு கொடுத்து ஆள் அனுப்பி....

திருடா திருடியில் மன்மத ராசா பாடலை மீண்டும் போடச் சொல்லி பல தியேட்டர்களின் திரைகள் கிழிக்கப்பட்டன.அந்த ஒரு பாடலை வைத்து படமும் பெரும் வெற்றி பெற்றது. இந் நிலையில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்படத்திலும் அதே டெக்னிக்கை செயற்கையாக புகுத்த முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் தாரிகாவுடன் தனுஷ் ஆடும் பாடலை மீண்டும் ஒன்ஸ்மோர் போடச் சொல்லி குரல் கொடுக்க,ஆட்களுக்குப் பணம் கொடுத்து தனுஷ் தரப்பினரே, குறிப்பாக டைரக்டர் ஸ்டான்லி தரப்பே, தியேட்டர்களுக்குஅனுப்புவதாகவும் கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். இது உண்மையா தனுஷ்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil