twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு, யோகிபாபு இருவருடன் நடித்த அனுபவம்... திண்டுக்கல் ஐ.லியோனி சொல்லும் சுவாரஸ்யங்கள்

    |

    சென்னை: சினிமா என்பது மாயை என்பதை உணர்ந்து, எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி கொடுத்தார் இயக்குநர் அனுசரண்.

    எனது திறமையை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என்று பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    தி கிரே மேன்..கொடூர வில்லனாக மிரட்டும் தனுஷ்..தரமான சம்பவம் வெயிட்டிங்!தி கிரே மேன்..கொடூர வில்லனாக மிரட்டும் தனுஷ்..தரமான சம்பவம் வெயிட்டிங்!

    வனவாசம்

    வனவாசம்

    கேள்வி: சினிமாப்பயணம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ராமருக்கு 12 ஆண்டுகள் வனவாசம். ஆனால் திண்டுக்கல் லியோனிக்கு 22 ஆண்டுகள் வனவாசம். காதலர் தினம் படத்திற்காக 11 நாட்கள் நடித்தேன். ஆனால் அதை நீக்கி விட்டார்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

    வெறுக்கக்கூடிய மிருகம்

    வெறுக்கக்கூடிய மிருகம்

    கேள்வி: படத்தின் தலைப்பு பன்றிக்குட்டி என வைக்க காரணம்?

    பதில்: பன்றிக்குட்டி என்ற இந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எல்லோரும் வெறுக்கக்கூடிய,அல்லது அருவருப்பாக நினைக்க கூடிய மிருகமான பன்றியை ஒரு திரைப்படத்திற்குள் கொண்டு வந்து, அதன் பெயரை தலைப்பாக பயன்படுத்தி மக்களை சந்தோஷப்படுத்த இயக்குநர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.

    மக்களுக்கு நம்பிக்கை தரும் சாமியார்

    மக்களுக்கு நம்பிக்கை தரும் சாமியார்

    கேள்வி: பன்றிக்குட்டி படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பற்றி ?

    பதில்: சினிமா என்பது மாயை என்பதை உணர்ந்து, எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி கொடுத்த இயக்குநர் அனுசரண், எனது திறமையை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற சாமியார் கதாபாத்திரம் மக்களுக்கு நம்பிக்கை தரும் சாமியார் ஆகும். மக்களை ஏமாற்றும் சாமியார் அல்ல...

    முத்தாய்ப்பாக மூன்று திட்டங்கள்

    முத்தாய்ப்பாக மூன்று திட்டங்கள்

    கேள்வி: தமிழ்நாடு பாடநூல் வாரிய கழகத் தலைவராக உங்கள் பணி எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது?

    பதில்: 33 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி, தேர்தல் அலுவலராக பணிபுரியும் பட்சத்தில் மட்டுமே பச்சைக்கலர் மை எனது பேனாவில் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் இன்று தமிழ்நாடு பாடநூல் வாரியத்தின் தலைவராக பணிபுரிவது என்பது எனக்கு பெருமையாக உள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திசைந்தோறும் திராவிடம், கலைஞரின் மொழிபெயர்ப்பு, இளந்தளிர் இலக்கியத்திட்டம் போன்ற 3 முக்கியமான திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் குழந்தைகளுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, மாற்றுமொழிகளில் திராவிட சிந்தனைகளை கொண்டு சேர்ப்பது போன்றவையாகும்.

    புதுஅனுபவம்

    கேள்வி: நடிகர் வடிவேலுவுடன் நடித்த நீங்கள் இப்போது யோகிபாபுவுடன் நடித்தது குறித்து வித்யாசங்கள் சொல்லுங்களேன்.

    பதில்: நான் நடிகர் யோகிபாபுவின் ரசிகன். ஆலம்பனா படத்தில் நடிகர் யோகிபாபுவுடன் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இன்று யோகிபாபுவுடனும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன் . வடிவேலு, யோகிபாபு இரண்டு பேரும் மிக சிறந்த நடிகர்கள் தான். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ரசனைகள் மாறும் அவ்வளவு தான் என்றார் லியோனி. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/-gJb9MDZcRk இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான திண்டுக்கல் ஐ.லியோனி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Dindigul I. Leoni shares interesting info on the acting experience with Vadivelu and Yogibabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X