Exclusive: டியூட் படத்துல நிறைய தப்பு இருக்கு.. ஜோக் சொன்னா கூட ஹர்ட் பண்ணக்கூடாது.. பாக்யராஜ் பளிச்!
சென்னை: பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் அளித்த பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது. சமீபத்தில், தீபாவளிக்கு வெளியான பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்தேன், பெரிதாக கூட்டமே இல்லை. படத்தில் எல்லா சென்சிட்டிவிட்டியான விஷயத்தையும் ஜாலியாகவே எடுத்து செய்துள்ளனர், அதுதான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது என பளிச்சென தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் என கொண்டாடப்படும் பாக்யராஜ் இதை போல ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல் கதைகளை படங்களாக பண்ணி தமிழ் சினிமா ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளார். அதே பாணியில் கீர்த்தீஸ்வரன் டியூட் படத்தை இயக்கியுள்ளார் என ஆரம்பத்தில் பலரும் பில்டப் செய்யப்பட்ட நிலையில், பாக்யராஜ் அந்த படத்தை பார்த்துவிட்டு அதில், உள்ள பிரச்சனைகளை இந்த பேட்டியில் அலசி உள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படத்தை பார்த்து விட்டு ஐசரி கணேஷிடம் இந்த பையன் ரொம்ப நல்லா வருவான் விட்ராதீங்க என்று சொன்னேன். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது என ஹீரோவையும் பாராட்டியுள்ளார்.
ஜோக் சொன்னாலும் ஹர்ட் பண்ணக் கூடாது: காமெடி காட்சிகளாக இருந்தாலும், உருவ கேலி செய்து எடுத்தால் அது சரியான நகைச்சுவை இல்லை என்று விமர்சிக்கிறோம். ஒருவரை ஹர்ட் செய்துவிட்டால் அது ஜோக் என்று ஆகாது. பலரது சென்டிமென்ட்டுகளை எப்படி நொறுக்குகிறேன் பாருங்கள் என ஒரு படத்தை எடுத்தால் அது ரொம்பவே சென்சிட்டிவாக கொண்டு செல்லப்பட வேண்டிய விஷயம். ஆனால், அதை விளையாட்டாக கொண்டு சென்றது போல கீர்த்தீஸ்வரன் இந்த டியூட் படத்தை இயக்கியுள்ளதாகத்தான் எனக்கு இந்த படத்தை பார்த்தால் தெரிகிறது என பாக்யராஜ் கூறியுள்ளார்.
கூட்டமே இல்லை: தீபாவளி கூட்டம் மட்டும் தான் டியூட் படத்துக்கான வசூல் வரக் காரணம். மற்றபடி ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்துக்கு இல்லை. ஜென் ஸி கிட்ஸ் கொண்டாடியிருந்தால் இன்னமும் படத்துக்கு கூட்டம் இருந்திருக்கும் 10 நாட்களிலேயே படத்துக்கு கூட்டம் இல்லாமல் காலியாகி விட்டது. படத்தை பார்த்த பிறகு தான் அதற்கான காரணம் புரிந்தது. எல்லாத்தையும் காமெடியாக சொல்லி விட முடியாது. ஒருத்தன் தியாகம் செய்யுறான்னா அது ரொம்ப ப்யூரா இருக்கணும். ஆனால், இங்கே ஆரம்பத்தில் இருந்தே அசால்ட்டாக ஹீரோவை காட்டிவிட்டு திடீரென தியாகத்தின் திரு உருவமாக மாற்றுவது எல்லாம் செட்டே ஆகவில்லை என பாக்யராஜ் பேசியுள்ளார். அவரது பேட்டி வீடியோவை காண வீடியோ லிங்க்கை க்ளிக் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications











