twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோட்சேவை குற்றவாளி என்றாலே பிரச்சினை தான் ... கார்த்திக் சுப்புராஜ் பளீச் !

    |

    சென்னை : விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மகான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது.

    படத்தை பார்த்த ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனம் வந்திருக்கும் நிலையில், துருவ் விக்ரமின் திறமையான நடிப்பிற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஜகமே தந்திரம் படம் தந்த வீழ்ச்சியிலிருந்து கார்த்திக் சுப்புராஜை மகான் திரைப்படம் மீண்டுள்ளது. இத்திரைப்படம் குறித்து ஊடம் ஒன்றுக்கு சுவாரசியமான பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

    வாவ்...செம...கமலின் விக்ரம் பட ரிலீஸ் தேதியும் வந்தாச்சு...உற்சாகத்தில் ரசிகர்கள் வாவ்...செம...கமலின் விக்ரம் பட ரிலீஸ் தேதியும் வந்தாச்சு...உற்சாகத்தில் ரசிகர்கள்

    மகான்

    மகான்

    விக்ரமின் குடும்பமே காந்தியவாதி குடும்பம். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் விக்ரம். வளர்ந்து திருமணமாகி, ஒரு பையனும் பிறந்த பிறகு நாற்பது வயதில் ஒரே ஒரு நாள் வாழ்க்கையை தன் மனம் போனபோக்கில் வாழ நினைக்கிறார் விக்ரம். இந்த பாடத்தில் விக்ரமின் பெயர் காந்தி மகான் என்றார்.

    தவறான புரிதல்

    தவறான புரிதல்

    இந்த படமே, காந்தியின் தத்துவத்தை சொல்லும் படமோ, அவரின் புனிதத்தை சொல்லும் படமோ இல்லை. காந்தி சொன்ன கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் பற்றிய படம் தான் மகான். காந்தியவாதியை இந்த படத்தில் தவறாக காட்டவில்லை, காந்தியின் கொள்கைகளை மூர்க்கத்தனமாக புரிந்து கொண்ட எக்ஸ்டீம் காந்தியவாதிகளின் கதாபாத்திரம் இப்படத்தில் உள்ளது என்றார்.

    எதிர்ப்பாளர் இல்லை

    எதிர்ப்பாளர் இல்லை

    இந்த படத்தைப்பார்த்த பலர், என்னை காந்தியின் எதிர்ப்பாளர் என்றும் கோட்சேவின் ஆதரவாளர் போலவும் சித்தரித்து வருகின்றனர். உண்மையில் நானும், எனது அப்பவும் மிகப்பெரிய காந்தியவாதிகள். எந்த கொள்கையாக இருந்தாலும், அதில் நல்லது இருந்தால் எடுத்துக்கொள்வேன், அதுபோல, காந்தியின் பல கொள்கைகளை நான் கடைபிடித்து வருகிறேன்.

    கோட்சேவை பற்றி பேசினால் பிரச்சினை

    கோட்சேவை பற்றி பேசினால் பிரச்சினை

    மகான் படத்தில் கோட்சேவை விமர்சிக்கும் வகையில் ஒரு வசனம் வரும், கோட்சேவைப் போன்ற கொள்கை வெறிப்பிடித்த ஒருவன் தான் காந்தியை சுட்டார் என்று ஆனால், அந்த வசனத்தை தணிக்கைக்குழு எடுக்க சொல்லிவிட்டனர். காந்தி இறந்துவிட்டார் என்று சொல்லலாம், ஆனால் காந்தியை கோட்சே சுட்டார் என்றால் பிரச்சனை வரும், நாட்டின் நிலை அப்படி இருக்கிறது என்றார்.

    Recommended Video

    Mahaan படத்தில் என் Scenes Deleted!காரணம்? Vani Bhojan First Exclusive Clarification
    நடுநிலையான படம்

    நடுநிலையான படம்

    தொடர்ந்து, பேசிய கார்த்திக்சுப்புராஜ், இந்த உலகத்தில் ரொம்ப நல்லவனும் இல்லை கேட்டவனும் இல்லை அனைவருமே நடுநிலையானவர்கள் அதுப்போல, எது நல்லது, எது கெட்டது என தெரிந்து அவை இரட்டையும் சரிபாதி கலந்து இப்படத்தில் கொடுத்து இருக்கிறேன். இளைஞர்கள் மத்தியில் இந்த படம் பேசப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

    English summary
    Mahaan Director Karthik subbaraj interview, கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X