For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜாங்கோ படம் பற்றி மனம் திறக்கும் இயக்குனர் மனோ கார்த்திகேயன்

  |

  சென்னை : திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக வெளிவந்துள்ள ஜாங்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

  இயக்குனர் மனோ காத்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

  கவர்ச்சி உடையில் நீச்சல்குளத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய சீரியல் நடிகை கவர்ச்சி உடையில் நீச்சல்குளத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய சீரியல் நடிகை

  இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மனோ கார்த்திகேயன்.

  கோ டைரக்டரா முண்டாசுப்பட்டியில்

  கோ டைரக்டரா முண்டாசுப்பட்டியில்

  கேள்வி : இப்படி ஒரு வெரைட்டியான படம் கொடுக்க சந்தித்த சவால்கள் என்ன?

  பதில் : இந்த படத்துல எனக்கு சவாலா இருந்த விஷயம் நிறைய இருக்கு. அதுலயும் குறிப்பா, கதை திரைக்கதை எல்லாம் எழுதறப்பவே இந்த கதைய எப்படி ஒரு ப்ரொட்யுசருக்கு புரிய வக்கிறதுங்கிறதுதான் மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. நிச்சயமா மக்களுக்கு பிடிக்கும். ஏன்னா அந்த அளவுக்கு கவனமா திரைக்கதைய கவனமா அமைச்சிருந்தேன். முண்டாசுப்பட்டில கோ டைரக்டரா நான்ஒர்க் பண்ணதால , சிவி குமார் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். அதனால நல்ல புரிதல் இருந்துச்சு. இந்த படத்த ஓக்கே பண்ணிட்டாரு.

  யார் எப்போ கேட்டாலும்

  யார் எப்போ கேட்டாலும்

  கேள்வி : எப்படி எல்லாருக்கும் டைம்லூப் விஷயத்த எளிமையா புரிய வைக்க முடிஞ்சது ?

  பதில் : டைம் லூப் ல நிறைய விதங்கள் இருக்கு. அதுல நான் அமைச்சிருந்த காட்சியமைப்புகள் கொஞ்சம் வித்யாசமானது. ஒரு சீனே திரும்ப திரும்ப வர்ற மாதிரி இருக்கும். ரிப்பிட் ல வர்றப்போ அது போரடிக்காம இருக்கனும். அத சுவாரஸ்யமா குடுக்கனும்ங்கிறதுல ரொம்பவே கவனமா இருந்தேன்.

  அசிஸ்டண்ட், டெக்னீஷியன் யாரா இருந்தாலும் படத்த பத்தி கேள்வி கேளுங்கன்னு சொல்லுவேன். கேள்வி கேட்க கேட்கதான் எல்லாருக்கும் புரியும். அப்பதான் நல்லா ஒர்க் பண்ணுவாங்க. படம் பத்தின சந்தேகங்கள், என்ன யார் எப்போ கேட்டாலும் சொல்வேன். ஏன்னா மக்கள் யாரும் கேள்வி கேட்டுட கூடாது.

  மேனரிசம்-ன்னு ஒன்னு இருக்குல்ல

  மேனரிசம்-ன்னு ஒன்னு இருக்குல்ல

  கேள்வி : கதாப்பாத்திரங்கள் எப்படி கதையோட ஒத்து போனாங்க. கதை எழுதும் போதே இவங்கதான்னு பிக்ஸ் பண்ணிட்டீங்களா?

  பதில் : திரைக்கதைலயே மேனரிசம் யூஸ் பண்ணிகிட்டேன். தங்க துரை, ரமேஷ் திலக் இவங்களுக்கெல்லாம் ஒரு மேனரிசம் இருக்கும். அவங்க அவங்க கேரக்டருக்கு தகுந்த மாதிரி டயாலாக், சுச்சுவேஷன் வக்கிறப்போ அது இன்னும் அழகா வரும். எல்லா ஆர்டிஸ்ட்டுமே சூப்பரா நடிச்சிருந்தாங்க. மிருணாளினி ரவி கேரக்டர் ஒரு போல்டான கேரக்டர். இந்த கேரக்டருக்கு அவங்க பொருத்தமா இருக்கும்ன்னு நெனச்சேன். நெனச்ச மாதிரியே அருமையா பண்ணிருக்காங்க.

  எக்ஸாம்க்கு வெய்ட் பன்ற மாதிரி

  எக்ஸாம்க்கு வெய்ட் பன்ற மாதிரி

  கேள்வி : படத்தின் மிரட்டலான இசை பற்றி சொல்லுங்களேன்

  பதில் : ஜிப்ரான் ராட்சன் படம் லாம் ரொம்ப அருமையா பண்ணிருந்தாரு. இந்த படம் ரொம்ப ஸ்ட்ராங்கான கதைக்களம். அதுக்கேத்தமாதிரி ஒருத்தர் தேடும் போதுதான் ஜிப்ரான் கிடைச்சாரு. ஆனா அவருக்கு ஒரு யோசனை இருந்துச்சு. புது இயக்குனர், வேற மாதிரியான கதை, ஒர்க் அவுட் ஆகுமான்னு டவுட்டா இருந்துச்சு. படம் பார்த்து பிடிச்சிருந்தா, இதுக்கு நான் ம்யூசிக் பண்றேன்னு சொன்னாரு. எக்ஸாம் எழுதிட்டு வெய்ட் பன்ற மாதிரி இருந்துச்சு. அவர் படத்துக்கு ம்யூசிக் போட்டி படம் நல்லாருக்கு. இல்லன்னா இல்லாங்கிற சுச்சுவேஷன். ஒரு வழியா அவருக்கு படம் பிடிச்சி போயி, அவரே ம்யூசிக் போட்டுகுடுத்து வெற்றிகரமா ஆக்கிருக்காரு.

  ஜாங்கோ பார்ட் 2

  கேள்வி : ஸ்பெஷல் நன்றிகள் யாருக்கு சொல்ல விரும்புறீங்க?

  பதில் : VFX டீம் ல லூப்ன்னு ஒரு டீம் தான் பண்ணுனாங்க. ரொம்ப உழைப்பும் மெனக்கடலும் குடுத்துருக்காங்க. உலகத்திரைப்படங்கள் இது வரைக்கும் இல்லாத அளவு இதுல சொல்லப்பட்டுருக்கு. க்ளைமேக்ஸ் கூட ட்விஸ்ட் இருக்கு. பார்ட் 2 வரலாம். அதுக்கான லீட் வச்சி முடிச்சிருக்கேன். அதுக்கான வாய்ப்புகள் அமைஞ்சா நிச்சயம் பண்ணலாம் என சொல்லி முடித்தார், ஜாங்கோ பட இயக்குனர் மனோ கார்த்திகேயன்.இந்த பேட்டியின் முழு வீடியோ பில்மிபீட் தமிழ் யுட்யூபிலும் காணலாம் .

  English summary
  Director Mano Karthikeyan Opens Up About Jango Movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X