»   »  லோட்மேன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர் விஷால்'!- இயக்குநர் முத்தையா

லோட்மேன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர் விஷால்'!- இயக்குநர் முத்தையா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது.

தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாகத்தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி, மகள் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி.


நம்முடைய பெற்றோர்களை தாண்டி நம் பாட்டி நமக்கு வாங்கி கொடுக்கும் பொருட்கள் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவைப் பற்றி பேசும் படம்தான் மருது.


லோட் மேன்

லோட் மேன்

உலகத்தில் உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடல்வாகு தெறிப்பாக தான் இருக்கும். எல்லா ஊரிலும் முட்டைகளை சுமக்கும் 'லோட் மேன்' என்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அவர்களைப் பார்க்க நார்நாராக நல்ல வளத்தியாக, வயிறு என்ற ஒன்றே வெளியே தெரியாத அளவுக்கு இருப்பார்கள். அவர்களுடைய வேலை காலை 10 மணிக்கு ஆரம்பித்தது என்றால் இரவு 10 மணி வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.


விஷாலுக்கு வேஷப் பொருத்தம்

விஷாலுக்கு வேஷப் பொருத்தம்

இப்படி இருக்கும் 'லோட் மேன்' கதாபாத்திரத்துக்கு விஷால் மிகச் சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும் , நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது. படத்தில் மருது என்னும் கதாபாத்திரம் மூட்டைகளை சுமக்கும் லோட் மேன் கதாபாத்திரமாகும். இந்த கதாபத்திரத்துக்கு எடுத்துகாட்டாக என்னுடைய பெரியப்பாவை எடுத்து கொண்டேன். அவர் கையில் சிங்கத்தையும், நெஞ்சில் புலியையும் பச்சை குத்தி இருப்பார். நான் சிறுவயதில் இருந்தே அதைப் பார்த்து ரசித்து இருக்கிறேன். நாம் ஒரு நாள் திரைப்படம் இயக்கும் போது இதே போல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு.


அப்படி என்னுடைய பெரியப்பாவை போன்ற ஒரு கதாபாத்திரமாக தான் மருது என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். நிஜத்தில் என்னுடைய பெரியப்பா வேலைக்கு செல்லும் போது மேலாடை ஏதும் அணிந்திருக்கமாட்டார். ஆனால் படத்துக்காக விஷால் முண்டா பனியன் அணிந்திருப்பது போல் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன்.சிங்கமும் புலியும்

சிங்கமும் புலியும்

விஷாலின் உடல் அமைப்புக்கும், முகஅமைப்புக்கும் ஏற்ற கதாபாத்திரம் இந்த மருது. சிங்கத்தை நாம் பார்த்தாலே மிரட்டலாக இருக்கும், சிங்கத்துக்கு அப்படி ஒரு ஆஜானுபாகுவான தோற்ற்றம் உண்டு . புலி தன்மானம் உள்ள ஒரு மிருகம். அதனால் உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் அவ்விரு மிருகங்களின் உருவத்தையும் பச்சைக் குத்தி இருப்பான்.


ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. என்னுடைய முதல் இரு படங்களில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்தார். இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் படபிடிப்பு ஆரம்பிக்கவிருந்த நேரத்தில்தான் அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் , காக்கிசட்டை போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தன.


எல்லாருக்கும் முக்கியப் பாத்திரம்

எல்லாருக்கும் முக்கியப் பாத்திரம்

அவரைப் பார்க்கும் போது நமக்கு நம்ம ஊர் பெண் என்ற நினைப்பு தோன்றும். இதுதான் ஸ்ரீ திவ்யாவை படத்தின் நாயகி ஆக்கியது. அவருக்கும் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் தான். என்னுடைய படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் முக்கியமானதாகத்தான் இருக்கும். விஷால் , ஸ்ரீ திவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் என படத்தில் அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரம்தான்.


காதலுக்கு முக்கியத்துவம்

காதலுக்கு முக்கியத்துவம்

என்னுடைய முந்தைய படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தில் காதலுக்கு முக்கியதுவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறேன். இக்காட்சிகள் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். படத்தில் கதையை மீறி எந்த ஒரு விஷயமும் இருக்காது. செண்டிமெண்ட் காட்சிகள் முக்கிய இடம் பிடிக்கும்.


மாஸ் விஷால்

மாஸ் விஷால்

ஒரு கதையில் எமோஷன் என்னும் ஒரு விஷயம் இருக்கும் போது கண்டிப்பாக அதிரடி சண்டைக் காட்சிகளும் இருக்கும். நான் என்னுடைய நாயகனை லோட் மேன் ஆக மாற்றி சாராசரி மனிதன் எப்படி இருப்பானோ, கோபப்படுவானோ அதே போல் எதார்த்தமாக காட்டிவிட்டு சண்டை காட்சி இல்லாமல் காட்டினால் நன்றாகவா இருக்கும்? நிச்சயம் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. அதே போல் விஷால் போன்ற மாஸான ஒரு நாயகனை வைத்து கொண்டு சண்டை காட்சிகள் இல்லை என்றாலும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்களே!


தப்பான படம் இல்லை

தப்பான படம் இல்லை

நான் சூப்பர் படம் எடுக்கிறேனா ? என்று கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால் நான் தப்பான படம் இயக்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். இந்த மருதுவும் அதைப் போன்ற ஒரு படம் தான்.


எக்கச்சக்க சண்டைக் காட்சி உண்டு

எக்கச்சக்க சண்டைக் காட்சி உண்டு

படத்தில் அருமையான, காரணத்துடன் கூடிய சண்டைக் காட்சிகள் நிறையவே உள்ளன. மருது டீசரில் விஷால் வாயில் அருவாளை கடித்து கொண்டு வருவது போன்றதொரு காட்சி உண்டு. நிச்சயம் அது எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு காட்சியாக இருக்கும். ஏனென்றால் நான் ஒரு காட்சியை எடுக்கும் போது ஒரு கடைக்கோடி ரசிகனாக இருந்துதான் அந்தக் காட்சியை இயக்குவேன். அதனால் எனக்குப் பிடிக்கும் ஒரு காட்சி ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


இமானுடன்

இமானுடன்

இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு.என்னுடைய முதல் இரண்டு படத்தில் எப்படியாவது அவரை இசையமைக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் மூன்றாவது படத்தில்தான் அது நிறைவேறி உள்ளது. எனக்கு மகிழ்ச்சி. அதே படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். நான்கு பாடல்களும் மிகவும் வித்தியாசமாகவும், வெவ்வேறு வகையான பாடல்களாகவும் வந்துள்ளன. இதற்காகத்தான் நான் இமானுடன் இணைய விரும்பினேன்.


சூரி இருக்காருங்க...

சூரி இருக்காருங்க...

படத்தின் 2 முதல் 3 ஆவது ரீலில் இருந்து ப்ரீ கிளைமாக்ஸ் வரை கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரம் நடிகர் சூரியின்னுடையது. அவர் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும். எனக்கு அவருடைய கால்சீட் என்னுடைய முதல் இரண்டு படங்களுக்குக் கிடைக்கவில்லை எனவே அவரை என்னுடைய மூன்றாவது படத்தில் மிகச் சரியாக உபயோகப்படுத்தி உள்ளேன்.


ராஜபாளையம் பின்னணி

ராஜபாளையம் பின்னணி

படத்தின் கதைக்களம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எப்போதும் அப்பகுதி மிகவும் செழிப்பாக அழகாக இருக்கும். நான் கொம்பன் படம் முடித்தவுடன் தயாரிப்பாளர் அன்பு அண்ணன் என்னை அழைத்து எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு அவர் என்னை அழைத்ததும் மிகவும் மகிழ்ச்சி. நான் அவரிடம் விஷால் இந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதும் எனக்கு உடனேயே அவருடைய கால்ஷீட்டை வாங்கித் தந்தார்.


நான்காவது முயற்சி

நான்காவது முயற்சி

எனக்கும் விஷாலை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்று ஆசை உண்டு. நான் மூன்று முறை முயற்சித்தும் அது நடக்கவில்லை இந்த முறை அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. அனுபவங்கள் கூடக் கூட நாம் செய்து முடிக்கும் வேலையின் நாட்கள் குறைய வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பை நான் திட்டமிட்டதை விட மிக விரைவாக முடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி.


English summary
Director Muthaia's interview on his forthcoming movie Vishal starrer Marudhu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil