twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது எந்த மதத்தையும் சாடும் பாட்டு இல்லை.. இயக்குநர் ராஜீவ் மேனன் மற்றும் மதன் கார்கியின் பேட்டி!

    |

    சென்னை: இயக்குநர் ராஜீவ் மேனன் மற்றும் மதன் கார்கியின் பேட்டி வெளியாகி உள்ளது.

    பாடலாசிரியர் மதன் கார்கியின் வரிகளில் உருவான கடவுளும் நானும் எனும் ஆல்பம் பாடலை இயக்குநர் ராஜீவ் மேனன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

    இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கிய மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் மற்றும் சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை திரைப்படம் உள்ளிட்ட ஏகப்பட்ட மாஸ்டர் பீஸ்களை உருவாக்கி உள்ளார்.

    Director Rajiv Menon and Madhan Karky interview about Kadavulum Naanum!

    வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்த ராஜீவ் மேனன், வைரமுத்துவின் மகன் மதன் கார்கியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

    கூடிய சீக்கிரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானின் மகனுடன் பணியாற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, அவருடைய அப்பாயின்மென்ட்டுக்கு இப்பவே மனு போடணும் என சிரித்துக் கொண்டே பேசினார்.

    எல்லா மதங்களுக்குமான பாடலாக தான் கடவுளும் நானும் ஆல்பம் இருக்கும் என்றும், இந்த பாடல் எந்த ஒரு மதத்தையும் சாடுவதற்காக இல்லை. மாறாக, மதங்களை கடந்தவர் கடவுள் என்பதை புரிய வைக்கும் முயற்சியாகவே இதை செய்துள்ளோம் என்றார்.

    மதன் கார்கி பேசும் போது, இந்த பாடலை எழுதியதற்காக அப்பா என்னை வாழ்த்தினார் என்று பேசிய மதன் கார்கி, தனக்கு பிடித்த கடவுள் பாடல் என்றால், அது எப்போதுமே அன்பென்ற மழையிலே பாடல் தான் என்று கூறினார். ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் அந்த அற்புதமான பாடல் எப்படி உருவானது, அதில் ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக் என்ன என்பதை ராஜீவ் மேனன் விளக்கி இருக்கும் சூப்பரான பேட்டி இரு பாகங்களாக வெளியாகி உள்ளன. கண்டு ரசியுங்கள்!

    English summary
    Director Rajiv Menon and Madhan Karky interview about Kadavulum Naanum album song, which was done by both the legends.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X