twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியா பவானி ஷங்கர் காப்பாற்றும் இரண்டு உயிர்கள் ... சர்ஜுன் இயக்கிய "பிளட் மனி" சிறப்பு பேட்டி

    |

    சென்னை : பிரியா பவானி ஷங்கர், 'மெட்ரோ' ஷிரிஷ், கிஷோர், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ள வித்யாசமான கதைக்களம் கொண்டு, ஜீ5 OTT தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளட் மணி.
    சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சர்ஜூன் முதல் முறையாக வேறொருவர் கதைக்கு இயக்குனராக மட்டும் வேலை செய்து, இந்த படத்தை திரைக்கதை மூலம் கொஞ்சம் மெருகூட்டி காட்சிகளை அமைத்து உள்ளார் .

    நவரசா படத்தில் வித்தியாசமான ஒரு படைப்பு , மா, லட்சுமி போன்ற குறும்படங்களை இயக்கியுள்ள சர்ஜூன் 'பிளட் மணி' படத்தை இயக்கியுள்ளார். வித்யாசமான படத்தின் வித்யாசமான அனுபவங்களை நம்மிடையே பகிர்கிறார்.

    நாங்களும் வாங்குவோம்ல.. த்ரிஷா, பார்த்திபனை தொடர்ந்து கோல்டன் விசாவை பெற்ற அமலா பால்!நாங்களும் வாங்குவோம்ல.. த்ரிஷா, பார்த்திபனை தொடர்ந்து கோல்டன் விசாவை பெற்ற அமலா பால்!

    ஓடிடி இயக்குனர்

    ஓடிடி இயக்குனர்

    கேள்வி : எப்படி இருக்கு உங்க மன நிலை, இது மாதிரியான பெரிய ஓடிடிதளத்துல ஒர்க் பண்ணும் போது??

    பதில் : ரொம்பவே புது அனுபவமாவும் ஈசியாவும் தான் இருக்கு. ஏன்னா ஒரு கார்ப்பரேட்க்கு ஒர்க் பண்றோம்ன்னா அது முழுக்க முழுக்க ப்ரொபஷனலா இருக்கும். யார் யாருக்கு என்ன வேலைன்னு முன்னாடியே பிரிச்சிருவாங்க. எல்லாரும் ப்ரொபஷனல்ங்கிறதால பக்காவா தன் வேலைய முடிச்சிருவாங்க. அது மட்டும் இல்லாம இது முழுக்க முழுக்க முற்றிலும் கதை திரைக்கதை எழுத்துன்னு எல்லாமே மிக சிறப்பா வடிவமைக்கப்பட்டு முடிக்கப்பட்ட ஒன்று. என்னோட இன்வால்மெண்ட்டே இல்லாம, லாக் பண்ணி வந்த கதை.அதை நான் சிறப்பா இயக்கி குடுத்துருக்கேன். என் கிட்ட குடுக்கும் போது பக்காவா ஸ்கிரிப்ட் முடிச்சி குடுத்துருந்தாங்க.

    டச்சிங்கான சீன்

    டச்சிங்கான சீன்

    கேள்வி : எமோஷனல் சீன்-ல்லாம் ரொம்ப டச்சிங்கா இருந்துச்சே?

    பதில் : நம்ம வீட்லயும் சரி, அக்கம் பக்கத்துலயும் சரி.. எல்லாருமே கஃல்ப் நாடுகள்-ல இருக்காங்க. அங்க அவங்க படற கஷ்டங்கள் ல்லாம் என்ன? என்னன்ன பிரச்சனைகள சந்திக்கிறாங்க. எதாவது தப்பு பண்ணிட்டா எங்க மாட்டிக்கிறாங்க. என்ன மாதிரியான தண்டனைகள் இருக்கு. இதெல்லாம் சொல்லப்படற உணர்வு பூர்வமான காட்சிகள் இருக்கும். அதனால பலருக்கும் டச்சிங்கா ஃபீல் பண்ற காட்சிகள் நிச்சயம் இருக்கு. என் பேமிலயும் நிறையபேர் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. அந்த வலி எல்லாம் என்னால உணர முடியும்.

    ஷுட்டிங் ஸ்பாட்

    ஷுட்டிங் ஸ்பாட்

    கேள்வி : அப்போ வெளி நாட்டுலதான் எடுக்கப்பட்டுருக்கா?

    பதில் : பெரும்பாலான காட்சிகள் சென்னைலயும், சின்ன சின்ன இடங்கள் ஹஜர்பைஜான் போன்ற இடங்கள் லயும் எடுத்துருக்கோம். குவைத் தான் படத்தோட கதை. ஆனா அங்க ஷூட் பண்ற அனுமதி இல்ல. அதனால யாருமே போகாத இடங்களா, வித்யாசமான லொகேஷன் ல்லாம் வச்சி இந்த படம் உருவாக்கியிருக்கோம்.

    சிங்கிள் டேக்தான்

    சிங்கிள் டேக்தான்

    கேள்வி : ஒர்க் பண்ண ஆர்டிஸ்ட் ல்லாம் எப்படி?

    பதில் : ஒர்க் பண்ண எல்லாருமே ரொம்ப ப்ரொபஷனலான ஆர்டிஸ்ட். இவங்க கூட ரொம்பவே ஈசியா இருந்துச்சு ஒர்க் பண்றதுக்கு. கிஷோர் சார் ல்லாம் வேற லெவல். இதான் சிச்சுவேஷன், இதான் எனக்கு அவுட் புட் வேணுன்னு சொன்னேன். ஃபுல் சீனும் ஒரே டேக் ல நடிச்சி குடுத்தார். அவ்ளோ நல்லாருந்துச்சு. மறுபடியும் போயி, சார் கேமரா வேற ஆங்கிள் ல இன்னொரு ஷாட் வேணும்ன்னு கேட்டேன். அதே போல எக்ஸாக்ட்டா, பர்பெக்ட்டா நடிச்சி குடுத்தார். அது எனக்கு படத்துல ரொம்பவே பிடிச்ச சீன்.

    பிடிச்சி நடிச்சாங்க

    கேள்வி : பிரியா பவானி ஷங்கர் எப்படி ?

    பதில் : அவங்க செட்ல வர்றதும் சரி, நடிச்சி குடுக்கறதும் சரி. ரொம்ப பிடிச்சி போயி பண்ணாங்க. எல்லாமே ஒரு டேக் ரெண்டு டேக் தான். அதுலயே அவ்வளவு சூப்பரா பண்ணாங்க. ரொம்ப குறுகிய காலத்துல எடுக்கப்பட்ட படம்தான். அதுக்கு காரணம் அதுக்கு அமைஞ்ச ஆர்டிஸ்ட் அப்படி.என்று மனம் திறந்து பாராட்டினார் மகிழ்ச்சியான இயக்குனர். இந்த பேட்டியின் முழு வீடியோவை பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனல் மூலம் காணலாம் .

    English summary
    Director Sarjun shares his experience working on "Blood Money"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X