twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்திப்போமா?

    By Staff
    |

    தாயுமானவர் அறிவழகன்


    மனிதர் துறுதுறுவென்று இருக்கிறார். கேட்ட கேள்விகளுக்கு சட், சட்டென பதில்கள் வந்து விழுகின்றன. கொஞ்ச நேரம் பேசினாலே நண்பராகிவிடுகிற ரகம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் கூட தன்னைப் பற்றிக் கூறும்போது I am a lazy guy, sir என்கிறார். நிறையவிஷயம் இருக்கும் இளைஞர். இந்தக் கலைஞனுடன் ஒரு பேட்டி:

    டும் டும் டும் சத்தம் பலமா இருக்கு போல?

    நிச்சயமா. நாங்க எதிர்பார்த்ததை விட ரொம்ப பெரிய வெற்றி. வசூல் அளவுல இன்னும் பிக் அப் ஆகல. ஆனா,இன்டஸ்ட்ரில, நான் பார்த்த நண்பர்கள் மத்தியில படத்தப் பத்தி நல்ல பேச்சு இருக்கு.

    உங்களப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?

    டும் டும் டும் படப்பிடிப்பில் ஜோதிகாவுக்கு
    நடிப்பு சொல்லித்தரும் டைரக்டர்அழகம் பெருமாள்
    சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குலேசகரபுரம். ஆனா, படிச்சது நாகர்கோவிலில். வளர்ந்ததுதிருநெல்வேலியில்.

    87 முதல் 90 வரை சென்னை திரைப்படக் கல்லூரியில், இயக்குநருக்கான டிப்ளமோ படிப்பு. அப்புறம் 1991-ல்குருநாதர் மணி ரத்தினம் சார் கிட்ட சேர்ந்தேன். மணி சார் கிட்ட சேர்றதுக்கு முன்னால நான் என்னவாகப்போகிறேன் அப்படிங்கிறதுல ஒரு Oscillation இருந்தது.

    இஸ்ரோவுல ஒரு இன்டர்வியூ வந்தது. அந்த இன்டர்வியூவுக்காக காத்திருந்த நேரத்துல, பிரசாத் ஸ்டுடியோவில்செளன்ட் என்ஜீனியராக உள்ள திரு. பாண்டுரங்கன், என்னை மணி சார் கிட்ட அறிமுகப் படுத்தி விட்டார்.அப்படியே மணி சார் கிட்ட சேர்ந்துட்டேன்.

    மணிரத்னம் கூட எத்தனை படங்கள் அசிஸ்டன்ட் டைரக்டராக ஒர்க் பண்ணியிருக்கீங்க?

    இப்படி பேசணும் புரியுதா? மாதவனிடம்
    அழகம்பெருமாள்
    தளபதி தான்முதல் படம். அப்புறம், ரோஜா, பம்பாய், இருவர், திருடா திருடா படங்கள் வரை அவர் கூடஇருந்தேன். எனக்கும் மணி சாருக்கும் இடையே ஒருவிதமான பாச இழை இருக்கும். அவர்கூட இருப்பது ஒருஅப்பா கூட சேர்ந்து ஒர்க் பண்ற மாதிரி இருக்கும். ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு அன்டர்ஸ்டான்டிங்.

    அவர் ஒரு மென்மையான, கோபமே வராத ஒரு இயக்குநர். தேவைப்படும் நேரத்துல மட்டும்தான் விரட்டுவார்.மற்ற நேரத்துல அவர் ஒரு இனிமையான நண்பர். என்னுடைய தாய், தந்தைக்கு சமமாக அவரை நான்மதிக்கிறேன்.

    மணி சார் கூட நான் ஒர்க் பண்ண படங்கள் எல்லாத்துலயும் என்னோட பங்கு இருக்கும். கிராமப்புற கதைகள்னா,என் கிட்ட ஆலோசனை கேட்பார். டயலாக், மொழி வழக்கு இப்படி பல விஷயங்கள்ல என் கிட்ட ஆலோசிப்பார்.

    சரி, டைரக்டராகனும்னு எப்ப முடிவு எடுத்தீங்க?

    அது பம்பாய் படம் முடிஞ்சவுடனேயே ஆரம்பித்து விட்டது. பம்பாய் முடிந்ததும், நாம ஒரு படம்செய்யலாம்னு முடிவு செஞ்சேன். மணி சார் தயாரிப்புல படம் செய்யவும் திட்டம் ரெடியானது. ஸ்கிரிப்ட் கூடரெடி செஞ்சாச்சு. அந்த சமயத்துல உதயா பட வாய்ப்பு வந்தது. உடனே, மணி சார் நம்ம டைரக்டர். அவர் கூட எப்பவேண்டும்னாலும் செய்யலாம், முதல்ல வெளிப் படம் செய்வோம்னு தீர்மானிச்சு உதயாவை ஒத்துக்கிட்டேன்.

    உதயாவுக்கு ஆர்ட்டிஸ்ட் முடிவு பண்ணி படம் கூட ஆரம்பிச்சாச்சு. ஆனால சில தடங்கல்னால படம் நின்றுவிட்டது. அப்புறம்தான் டும் டும் டும் படத்தை முடிவு செய்தோம். இப்போ மறுபடியும் உதயா துவங்கிவிறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருது. ஆகஸ்ட் 15-ல ரிலீஸ் பண்றோம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X